வியட்னாம் காட்டில் காணாமல்போன இருவர் மீட்பு

வியட்னாம் காட்டில் காணாமல்போன இருவர் மீட்பு

1 mins read
89c097c7-e908-4580-b4c5-30b9bb0a78d9
படம்: லக்­டு­வோங் காவல்­து­றை ஃபேஸ்புக் -

வியட்­னா­மின் பிடூப் நுயி-பா தேசிய பூங்­கா­வில் காணா­மல் போன சிங்­கப்­பூர் ஆட­வ­ரும் வியட்­னா­மிய பெண்­ணும் (படம்) பின்­னர் மீட்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளின் நிலைமை சீராக உள்­ள­தென தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்த லக்­டு­வோங் நகர காவல்­து­றை­யி­னர், கடந்த திங்­கட்­கி­ழமை அந்த இரு­வரும் வனப் பகு­தி­யில் காணா­மல் போய்­விட்­ட­னர் என்று தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தா­கத் தெரி­வித்­த­னர்.

ஆட­வ­ருக்கு 22 வயது என்­றும் பெண்­ணுக்கு 21 வயது என்று தெரி­வித்த அவர்­கள், அந்த இரு­வர் டாலாட் நக­ரி­லி­ருந்து டாக்சி மூலம் தேசிய பூங்­கா­வுக்கு அரு­கில் உள்ள லாங் பியாங் சுற்­று­லாத் தளத்­துக்குச் சென்­ற­னர்.

காட்­டுப் பாதை வழி­யாக வனப்­பகு­திக்­குள் சென்ற அவர்­கள் பின்­னர் தாங்கள் வந்த வழியை மறந்த னர். அவர்­க­ளைக் காப்­பாற்­றிய மீட்­புக் குழு, லாங் பியாங் சுற்­று­லாத் தளத்­துக்கு மீண்­டும் அழைத்து வந்­தது.

சுற்றுலா வழிகாட்டியின்றி வனப்பகுதிக்குள் சுற்றுப்பயணிகளோ வருகையாளர்களோ செல்ல வேண்டாம் என்று லக்­டு­வோங் நகர காவல்­து­றை­யி­னர் ஆலோசனை கூறினர்.