தனியார் மருத்துவமனைகளில் படுக்கை, ஊழியர் பற்றாக்குறை

தனியார் மருத்துவமனைகளில் படுக்கை, ஊழியர் பற்றாக்குறை

2 mins read
7ab97870-2765-4bc1-93e5-3d281836b5bb
-

எல்லா வார்டுகளும் செயல்பட இயலா நிலை; அறுவை சிகிச்சைகள் ஒத்திவைப்பு

அர­சாங்க மருத்­து­வ­ம­னை­க­ளைப் போலவே தனி­யார் மருத்­து­வ­ம­னை­களும் படுக்கை பற்­றாக்­குறை பிரச்­சி­னையை எதிர்­நோக்­கு­கின்­றன.

தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் சில­வற்­றில் எல்லா வார்­டு­களும் செயல்­படும் அள­வுக்­குப் போதிய மனி­த­வ­ள­மும் இல்லை.

ஆகை­யால் அறுவை சிகிச்சை தேவைப்­ப­டக்­கூ­டிய நோயா­ளி­கள் அதிக காலம் காத்­தி­ருக்க வேண்­டிய நிலை இருக்­கிறது.

"அறுவை சிகிச்­சைக் கூடங்­கள் அல்­லது படுக்­கை­கள் போத­வில்லை. அத­னால் நோயா­ளி­களை அப்­போ­தைக்கு அப்­போது இதர மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு அனுப்­பு­வது உண்டு," என்று கிளெனிகல்ஸ் மருத்­து­வ­மனை அவ­ச­ர­கால சிகிச்­சைப் பிரி­வின் மருத்­து­வர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இந்த மருத்­து­வ­ம­னை­யில் அறுவை சிகிச்­சைக் கூடம் காலி­யாக இல்­லா­த­தால் எலும்பு முறிந்து­விட்ட நோயாளி ஒரு­வரை அர­சாங்க மருத்­து­வ­ம­னைக்­குச் செல்லும்­படி தான் கூறி­ய­தாக அந்த எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் கூறி­னார்.

அதே­போல் 'அஸிஸ் கிளி­னிக் ஃபார் விமென்' என்ற மருந்­த­கத்­தைச் சேர்ந்த டாக்­டர் அப்­துல் அஸிஸ் என்ற மருத்­து­வர், ஃபார்வே ஈஸ்ட் மருத்­து­வ­ம­னை­யைப் பயன்­படுத்தி சிகிச்சை அளிக்­கி­றார்.

பிர­சவ வார்­டு­க­ளைப் பொறுத்­த­வரை பிரச்­சினை இல்லை என்ற இவர், தான் சிகிச்சை அளித்­து­வரும் சில பெண்­கள் அறுவை சிகிச்­சைக்கு மூன்று மாதம் வரை காத்­தி­ருக்க வேண்டி இருக்­கிறது என்­றார்.

மவுண்ட் எலி­ச­பெத் நொவினா சிறப்பு வல்­லு­நர் நிலை­யத்­தின் டெஸ்­மண்ட் வெய் கல்­லீ­ரல், வயிற்று நோய்ப் பிரி­வின் மருத்­து­வர் டாக்­டர் டெஸ்­மண்ட் வெய், அறுவை சிகிச்­சைக்­கான கூடம் கிடைப்­பதற்கு மூன்று வாரங்­கள் வரை காத்­தி­ருக்­க­வேண்டி இருக்­கிறது என்­றார். முன்பு இரண்டு, மூன்று நாட்­களில் கிடைத்­து­வி­டும் என்­றும் அவர் கூறி­னார்.

அறுவை சிகிச்­சைக் கூடங்­கள் உள்­ளன. ஆனால் அவற்­றில் வேலை பார்க்க தாதி­யர்­தான் இல்லை என்று அவர் தெரி­வித்­தார். மவுண்ட் எலி­ச­பெத் நொவினா சிறப்பு வல்­லு­நர் நிலை­யத்­தில் மருந்­த­கம் நடத்­தும் டாக்­டர் சூ சு பின் என்ற மருத்­து­வர், தாதி­யர் பற்­றாக்­குறை கார­ண­மாக எல்லா வார்­டு­களும் செயல்­பட முடி­ய­வில்லை என்­றார்.

இத­னி­டையே, இந்த மருத்­து­வ­மனை­களை நடத்­தும் 'ஐஎச்­எச் ஹெல்த்­கேர் சிங்­கப்­பூர்' நிறு­வனத்­தின் தலைமை நிர்­வாகி டாக்­டர் பிரேம் குமார், தாதி­யர் பற்­றாக்­குறை கார­ண­மாக இதர பல மருத்­து­வ­மனை­க­ளைப் போலவே தங்­கள் மருத்­து­வ­ம­னை­களும் முழு­மை­யாகச் செயல்­பட இய­ல­வில்லை என்­றார்.

இவ்­வே­ளை­யில், ராபி­ஃள்ஸ் மருத்­துவமனை தலைமை நிர்­வாகி டாக்­டர் டான் ஷியாங் லுங், தங்­கள் மருத்­து­வ­மனை சுறு­சு­றுப்­பாக செயல்­பட்­டு­ வ­ரு­கிறது என்­றா­லும் அதி­க­ரித்­துள்ள நோயா­ளி­க­ளைக் கவ­னிக்­க­க்கூ­டிய நிலை­யில் இருந்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் பொது மருத்­து­வ­மனை­கள் பெரிய அள­வில் படுக்கை பற்­றாக்­கு­றையை எதிர்­நோக்கி வரு­கின்­றன. இருந்­தா­லும் சூழ்நிலை மேம்­பட்­டுள்­ளது என்­றும் 2033 முடிவு வாக்­கில் புத­திாக 4,000 தாதி­யரை சிங்­கப்­பூர் வேலை­யில் அமர்த்­தும் என்­றும் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் அண்­மை­யில் தெரி­வித்­தார்.