அனுபவ பயிற்சி பெற்ற ஆகாயப்படை வீரர்கள்

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை வீரர்­கள், ஆஸ்­தி­ரே­லிய அரசு ஆகா­யப் படை­யின் எஃப்35 போர்விமான வீரர்­க­ளு­டன் சேர்ந்து இரண்டு நாள் பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.

அந்த விமா­னத்­தின் ஆற்றல் பற்றி மேலும் பல­வற்றை அவர்­கள் தெரிந்­து­கொண்­ட­னர். போர் முறை­ ஏற்பாடுகளில் அந்த விமா­னத்தை எப்­படி ஒருங்­கி­ணைப்­பது என்­பது பற்­றி­யும் அவர்­கள் பல விவ­ரங்­களை அறிந்­த­னர்.

எஃப்-35 போர் விமா­னத்தை அமெ­ரிக்­கா­வின் 'லாக்­ஹீட் மார்டின்' என்ற தற்­காப்பு உடன்­பாட்டு நிறு­வ­னம் உரு­வாக்கியது.

ஐந்­தாம் தலை­மு­றை­யைச் சேர்ந்த அந்த போர் விமா­னம், உல­கின் ஆக நவீன போர் விமானம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

தென்சீனக் கடல் தெற்­குப் பகு­தி­யில் அனைத்­து­லக ஆகா­ய­வெ­ளிக்கு உட்­பட்டு சிங்­கப்­பூ­ரின் நான்­காம் தலை­முறை போர் விமா­னங்­கள், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் எஃப்-35ஏ ரக விமா­னங்­க­ளு­டன் சேர்ந்து பரந்து பயிற்­சி­யில் ஈடு­பட்­டன. அந்­தப் பயிற்சி செவ்­வாய், புதன் இரண்டு நாட்­கள் நடந்­தது.

அந்­தப் பயிற்சி பற்றி கருத்து கூறிய சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகாயப் படை­யின் 142 படைப் பிரி­வின் தள­பத்­திய அதி­கா­ரி­யான லெஃப்டி­னெண்ட் கர்­னல் மாக்ஸ் இங், எஃப்-35 ரக போர் விமா­னங்­கள் பற்றி சிறந்த முறை­யில் புரிந்­து­கொள்ள அந்­தப் பயிற்சி உதவி இருப்­ப­தா­கக் கூறினார்.

அதோடு, அந்த ரக விமா­னங்­களை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­களின் போர் முறை ஏற்­பா­டு­களில் எப்­படி ஒருங்­கி­ணைக்­க­லாம் என்­பது பற்­றி­யும் நம் வீரர்­கள் சிறந்த முறை­யில் புரிந்­து­கொள்ள அந்­தப் பயிற்சி உத­வி­யது என்­றார் அவர்.

போர் விமா­னத்­தில் பறந்து பயிற்சி மேற்­கொண்ட இரண்டு ஆகா­யப் படை­க­ளை­யும் சேர்ந்த வீரர்­கள், கருத்­த­ரங்கு ஒன்­றில் கலந்­து­கொண்டு பல்­வேறு தலைப்பு­கள் பற்றி விவா­தித்­த­னர்.

ஐந்­தாம் தலை­முறை, நான்­காம் தலை­முறை போர் விமா­னங்­களை ஒருங்­கி­ணைத்து செயல்­முறை ஆற்­றலை எப்­படி மேம்­ப­டுத்­து­வது என்­பது போன்­ற­வற்றை அவர்­கள் விவா­தித்­த­னர்.

இத­னி­டையே, "ஆஸ்­தி­ரே­லிய ஆகா­யப் படை­யு­டன் கூடிய அணுக்­க­மான இரு தரப்பு உறவு கார­ண­மாக வீரர்­கள் தொழில்­நுட்ப அறி­வைப் பெற்று இருக்­கி­றார்­கள்.

"எஃப்-35 விமா­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் திட்­டங்­கள் தொடர்­பான தலை­சி­றந்த நடை­மு­றை­க­ளைப் பற்­றி­யும் அவர்­கள் தெரிந்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்," என்று நேற்று சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப்­படை ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது.

நான்கு எஃப்-35பி போர் விமா­னங்­களை வாங்­கப் போவ­தாக 2019ல் தற்­காப்பு அமைச்சு அறி­வித்­தது. மேலும் எட்டு விமா­னங்­களை வாங்­கு­வ­தற்­கான விருப்ப உரிமை தன்­னி­டம் இருப்­ப­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

எஃப்-35 ரக விமா­னங்­களில் மூன்று வகை­கள் இருக்­கின்­றன. அதில் எஃப்-35பி ரக விமா­னத்தை சிங்­கப்­பூர் தேர்ந்­தெ­டுத்­த­தற்­குக் கார­ணம், அத்­த­கைய விமா­னங்­களுக்குக் குறுந்­தொ­லைவு ஓடு­பாதையே போது­மா­னதாகும்.

இந்த ரக போர் விமா­னங்­கள் செங்­குத்­தாக தரை­யி­றங்­கும் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

நாடா­ளு­மன்­றத்­தில் 2021ல் நிதி ஒதுக்­கீடு பற்­றிய விவா­தத்­தில் கலந்­து­கொண்டு பேசிய தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென், சிங்­கப்­பூர் 2026ஆம் ஆண்டு வாக்­கில் நான்கு எஃப்-35பி ரக போர் விமா­னங்­களை வாங்­கும் என்று தெரி­வித்­தார்.

குவா­மில் 2029 முதல் சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை பயிற்சி­களை தொடங்­கும் என்­றும் அவர் அறி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!