உள்ளூர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு: டுவிட்டருக்கு வெற்றி

உள்ளூர் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு: டுவிட்டருக்கு வெற்றி

1 mins read
7778600e-d46a-44e7-9fab-40ee52fea91a
வி வி டெக்னாலஜி (வலது) நிறுவனம் மஞ்சள் பறவை பறப்பது போன்ற சின்னத்தை தனது வர்த்தக அடையாளச் சின்னமாகப் பதிய 2018 செப்டம்பர் 10ஆம் தேதி மனுச் செய்தது. படம்: இபிஏ -

சமூக ஊட­க­மான டுவிட்­டர் பொது­வாக நீல நிறத்­தில் காணப்­ப­டு­கின்ற ஒரு பறவை போன்ற உரு­வத்தை தன்­னு­டைய அடை­யா­ளச் சின்­ன­மா­கப் பயன்­ப­டுத்­து­கிறது.

இந்­நி­லை­யில், உள்­ளூர் தொழில்­நுட்ப நிறு­வ­னம் ஒன்று பறவை சின்­னத்தை தன்­னு­டைய வர்த்­தக அடை­யாளச் சின்­ன­மாக பதி­யக் கூடாது என்று டுவிட்­டர் வழக்­குத் தொடுத்­தது. அதில் டுவிட்­ட­ருக்கு வெற்றி கிடைத்து இருக்­கிறது.

'வி வி டெக்­னா­லஜி' என்ற நிறு­ வ­னம் பறவை சின்­னத்தை தனது வர்த்­தக அடை­யா­ளச் சின்­ன­மா­கப் பதிய சிங்­கப்­பூர் அறி­வு­சார் சொத்து அலு­வ­ல­கத்­திற்கு மனுச் செய்­தது. ஆனால், அதை அந்த அலு­வ­ல­கம் நிரா­க­ரித்­து­விட்­டது.

இதை எதிர்த்து வி வி டெக்­னா­லஜி நிறு­வ­னம் மேல் முறை­யீடு செய்­தது. ஆனால் அதில் அதற்கு தோல்வி ஏற்­பட்­டு­விட்­டது. மனு தள்ளுபடியானது.