புக்கிட் மேரா, ஜூரோங் வெஸ்ட் ஆகிய இரண்டு பேருந்து வழித்தடங்களுக்கான ஒப்பந்தப்புள்ளியைத் தாக்கல் செய்யும்படி நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு விடுத்துள்ளது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இப்போது அந்த உடன்பாடுகளைப் பெற்று சேவை வழங்கி வருகிறது.
புக்கிட் மேராவுக்கு 17 பொதுப் பேருந்து வழித்தடங்களும் ஜூரோங் வெஸ்டிற்கு 26 வழித்தடங்களும் உடன்பாடுகளில் உள்ளடங்கும். அரசாங்கத்தின் கொள்முதல் இணையத்தளமான GeBiz இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது. புக்கிட் மேரா உடன்பாடு 2023ல் முடிவடைகிறது. ஜூரோங் வெஸ்ட் உடன்பாடு 2024ல் முடிவடைகிறது.
உடன்பாடுகளைப் பெற ஒப்பந்தப்புள்ளிகளை எஸ்பிஎஸ் டிரான்சிட் தாக்கல் செய்யும் என அதன் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவுக்கான துணைத் தலைவர் திருவாட்டி கிரேஸ் வூ கூறினார்.

