தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் முதலீட்டுச் சொத்து வருவாய் பற்றி அதிபரிடம் விளக்கம்

2 mins read
2361b7bf-0035-45e4-a115-1667c61789ff
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், ஜிஐசி, நாணய ஆணையம், தெமாசெக் ஆகியவற்றின் அதிகாரிகளும் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். படம்: ஹலிமா யாக்கோப்/ஃபேஸ்புக் -

சிங்­கப்­பூ­ரின் முத­லீட்­டுச் சொத்­து­களில் இருந்து நீண்­ட­கா­லப் போக்­கில் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற துல்லியமான வரு­வாய் விகி­தம் பற்றி துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பி­டம் விளக்­கம்­அளித்தார்.

அடுத்த வர­வு­செ­ல­வுத் திட்­டத்­திற்­காக நாட்­டின் முந்­திய சேமிப்­பில் இருந்து எந்த அள­வுக்கு அர­சாங்­கம் பணம் எடுத்­துக் கொள்ள முடி­யும் என்­பதைத் தீர்மா­னிக்க அந்த வரு­வாய் எதிர்­பார்ப்­பு­கள் பயன்­படுத்­தப்­படும்.

இது­பற்றி அதி­பர் ஹலிமா ஃபேஸ்புக்­கில் புதன்­கி­ழமை தெரி­வித்து இருந்­தார்.

அந்த விளக்­கக் கூட்­டத்­தில் அதி­பர் ஆலோ­சனை மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்து­கொண்­ட­னர்.

நிதி அமைச்சு, ஜிஐசி (சிங்­கப்பூர் முதலீட்டு நிறுவனம்), சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், தெமா­செக் ஆகி­ய­வற்­றின் அதி­காரிகள் அதில் கலந்­து­கொண்­ட­தாக அதி­பர் தெரி­வித்­தார்.

இந்த மூன்­றும் அர­சாங்­கத்­தின் சேமிப்பை நிர்­வ­கிக்­கின்­றன. உல­கப் பொரு­ளி­யல் நில­வ­ரங்­கள் பற்­றி­யும் புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள், பரு­வ­நிலை பாதிப்­பு­கள் போன்ற முக்­கி­ய­மான இடர்­கள் பற்­றி­யும் முத­லீ­டு­களில் இருந்து கிடைக்­கக்­கூ­டிய வரு­வாய் எதிர்­பார்ப்­பு­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் வழி­மு­றை­கள் குறித்­தும் ஆழ்ந்த அள­வில் அந்­தச் சந்­திப்­பின்­போது விவா­திக்­கப்­பட்­ட­தாக அதி­பர் தெரி­வித்­தார்.

அந்த விளக்­கக் கூட்­டம், வரு­டாந்­திர வர­வு­செ­ல­வுத் திட்ட நடை­மு­றை­யின் முக்கி­ய­மான ஓர் அங்­கம் என்று அதி­பர் ஹலிமா ஏற்­கெ­னவே குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

வர­வு­செ­ல­வுத் திட்­டத்தைப் பொது­வாக நாடா­ளு­மன்­றத்­தில் பிப்­ர­வரி மாதம் நிதி அமைச்­சர் தாக்­கல் செய்­வது வழமை.

ஆனால், அதற்­கான திட்ட நடை­முறை­களும் ஆலோ­ச­னை­களும் பல மாதங்­களுக்கு முன்பே தொடங்­கி­வி­டும்.

ஜிஐசி, நாணய ஆணையம், தெமாசெக் ஆகிய மூன்று அமைப்புகளின் நிர்வாகச் சபையினர், வருவாய் கணிப்புகளை மறுபரிசீலனை செய்து சான்றிதழைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

அதேநேரத்தில் அந்த மதிப்பீடுகள் பற்றியும் அந்த மூன்று அமைப்புகள் பயன் படுத்திய நடைமுறைகளையும் அரசாங்கம் சுதந்திரமாக, முழுமையாக மதிப்பிட்டு இருக்கிறது என்று அதிபர் ஹலிமா புதன் கிழமை தெரிவித்தார்.

அரசாங்கம் தெரிவித்து இருக்கும் யோசனை பற்றி அதிபர் ஆலோசனை மன்றத்துடன் விவாதித்து அதன்பிறகு தனது பதிலை தான் அறிவிக்கப் போவதாக அதிபர் குறிப்பிட்டு இருக்கிறார்.

நாட்டின் சேமிப்பிற்கான இரண்டாவது சாவி அதிபர் ஹலிமாவிடம் இருக்கிறது.