சிங்கப்பூரில் இந்தியாவின் 'டிவிஎஸ் அப்பாச்சி'

சிங்கப்பூரில் இந்தியாவின் 'டிவிஎஸ் அப்பாச்சி'

2 mins read
0d9c636c-f02b-4a0e-8e8a-e6121b3c164b
இடமிருந்து வலம்: ஷரத் மோகன் மிஷ்ரா (தலைவர், உத்திகள் குழு, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்), விமல் சும்ப்ளி (பிரிமியம் மோட்டார் சைக்கிள்களின் வர்த்தகத் துறை தலைவர், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்), ஜெ தங்கராஜன் (இயக்குநர், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சிங்கப்பூர் மற்றும் இந்தோனீசியா கிளைகள்), திரு ஹெர்பெர்ட் தேஹ் (இயக்குநர், மோட்டார்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்).படம்: மோனலிசா -

மோன­லிசா

இந்­தி­யா­வின் பிர­பல மோட்­டார் சைக்­கிள் உற்பத்தியாளரான 'டிவி­எஸ் மோட்­டார் நிறு­வ­னம்' சிங்­கப்­பூ­ரில் தன்­னு­டைய முதல் அதி­ந­வீன அனு­பவ மையத்தை நேற்று திறந்­துள்­ளது.

உபி1 தொழில் பேட்­டை­யில் திறக்­கப்­பட்­டுள்ள இந்­தக் கிளை­யில் இந்­நி­று­வ­னத்­தின் உயர்­ரக மோட்­டார்­சைக்­கிள்­கள் விற்­ப­னைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

குறிப்­பாக 'ஃபிளாக்‌ஷிப்' மாடல், பந்­தய ஆர்­வ­லர் ­க­ளுக்­கான 'டிவி­எஸ் அப்­பாச்சி ஆர்­ஆர்310' மிகுந்த செயல்­தி­றனை விரும்­பு­ கி­ற­வர்­க­ளுக்­கான 'டிவி­எஸ் அப்­பாச்சி ஆர்­டி­ஆர் ரேஞ்ச்' உள்­ளிட்ட பல்­வேறு அப்­பாச்சி ரக மோட்­டார்­சைக்­கிள்­கள் உள்­ளன.

மேலும் இக்­கி­ளை­யில் வாக­னப் பரா­ம­ரிப்­புச் சேவை வசதி, உதிரிப் பாகங்­கள் மற்­றும் இதர வாக­னப் பழுதுப் பொருள்­களும் உள்­ளன.

இதில், 'டிவி­எஸ் அப்­பாச்சி ஆர்­ஆர்310' ரக மோட்­டார்­சைக்­கி­ளின் விலை $9,500 வெள்­ளி­யும் (இறுதி விலை $19,700) 'டிவி­எஸ் அப்­பாச்சி ஆர்­டி­ஆர்200' ரக மோட்­டார்­சைக்­கி­ளின் விலை $5,800 வெள்­ளி­யும் (இறுதி விலை $23,600) ஆகும்.

மேலும் இக்­கி­ளை­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் மோட்­டார்­சைக்­கிள்­களை மிகை மெய்நிகர் தொழில்­நுட்ப வசதி மூலம் பரி­சோ­தித்து வாங்­க­லாம்.

கடந்த 40 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக இந்­நி­று­வ­னம் இரண்டு மற்­றும் மூன்று சக்­கர வாக­னங்­க­ளை­யும் இதர வாகன உதிரி பாகங்­க­ளை­யும் உற்­பத்தி செய்து வரு­கிறது.

உல­கம் முழு­வ­தி­லும் 80க்கும் மேற்­பட்ட நாடு­களில் இந்­நி­று­வ­னத்­தின் கிளை­கள் உள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதன் பதிவு அலு­வ­ல­கம் சென்­னை­யில் செயல் ­ப­டு­கிறது.

இது­வரை மூன்று மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மோட்­டார்­சைக்­கிள்­களை விற்­பனை செய்து உல­க­ள­வில் நான்­கா­வது பெரிய மோட்­டார்­சைக்­கிள் உற்­பத்­தி­யா­ளர் எனும் பெரு­மை­யை­யும் இந்­நி­று­வ­னம் பெற்­றுள்­ளது.

திறப்பு விழா­வில் பேசிய இக்­கி­ளை­யின் இயக்­கு­நர் திரு ஜெ தங்­க­ரா­ஜன், "சிங்­கப்­பூ­ரில் எங்­க­ளது விரி­வாக்­கம் அனைத்­து­ல­கச் சந்­தை­யில் எங்­களை முன்­னி­லைப் ­ப­டுத்­தும்.

சிங்­கப்­பூர் வாடிக்­கை­யா­ளர்­ களின் தேவை­க­ளை­யும் எதிர்­பார்ப்­பு­ க­ளை­யும் அதீத செயல்­ திறன்­மிக்க பல்­வேறு வகை மோட்­டார்­சைக்­கிள்­களை அறி­மு­கப்­படுத்து ­வ­தன் மூலம் பூர்த்தி செய்­ய­வுள்­ளோம்" என்று கூறி­னார்.

இந்­நி­று­வ­னத்­தின் வர்த்­த­கத் துறை தலைமை அதி­காரி விமல் சும்ப்ளி, "உல­க­ளா­விய வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­களை அறி வதற்­கான ஒரு வாய்ப்­பாக இவ்­வி­ரி­வாக்­கத்தை கரு­து­கி­றோம்," என்­றார்.

புத்­தாக்க தொழில்­நுட்ப முறை­க­ளை­யும் நுணுக்­கங்­க­ளை­யும் பயன்­ப­டுத்தி பல்­வேறு புதிய ரக வாக­னங்­க­ளின் வடி­வ­மைப்­பை­யும் ஆராய உள்­ளோம்." என்­றும் இவர் தெரி­விக்­கி­றார்.

மேலும் சிங்­கப்­பூர் சந்­தைக்­காக சோங் ஐக் குரூப்­பின் ஒரு பகு­தி­யான மோட்­டார் ஸ்போர்ட் பிரை­வெட் லிமி­டெட் என்ற நிறு­வ­னத்­து­டன் இது இணைந்து செயல் படுகிறது.