மானபங்கம்; தொடவில்லை என்கிறார் வெளிநாட்டு ஊழியர்

மானபங்கம்; தொடவில்லை என்கிறார் வெளிநாட்டு ஊழியர்

2 mins read
378eca57-e0f9-498e-9fbf-a2ba1e881084
-

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வர், காலாங் பாரு­வில் ஒரு பெண்ணை புளோக்­கின் மூலை­யில் தள்ளி மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ ப­டு­கிறது.

சில சூழ்­நி­லை­களில் மோச­மான மான­பங்­கக் குற்­றச்­செ­ய­லில் ஜக­தீஸ்­வ­ரன் கார்த்­திக், 35, ஈடு­பட்­ட­தாக நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது.

இந்­திய நாட்­ட­வ­ரான அவர், சென்ற திங்­கள்­கி­ழமை பிற்­ப­கல் 12.40 மணி­ய­ள­வில் 25 வயது பெண்ணை புளோக்­கின் மூலை­யில் தள்ளி சட்­ட­வி­ரோ­த­மாக தடுத்து வைத்­தி­ருந்­தார் என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன.

காவல்­து­றைக்கு அளிக்­கப்­பட்ட புகா­ரில், காலாங் பாரு­வில் அடை­யா­ளம் தெரி­யாத நப­ரால் மான­பங்­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அந்­தப் பெண் தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து கண்­கா­ணிப்­புக் கேம­ரா­வில் பதி­வான காட்­சி­களை ஆராய்ந்து சந்­தேக நபரை காவல்­து­றை­யி­னர் கண்­டு­பி­டித்­த­னர். புகார் அளிக்­கப்­பட்ட ஏழு மணி நேரத்­துக்­குள் சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டார்.

இந்த நிலை­யில் "சமூ­கத்­தின் பாது­காப்புக்கு மிரட்டலாக விளங்கும் பாலி­யல் குற்­றச்­செ­யல்­களை சகித்­துக்­கொள்ள முடி­யாது," என்று காவல்­து­றை­யி­னர் எச்­ச­ரித்­துள்­ள­னர். சட்­டப்­படி கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று நீதி­மன்­றத்­தில் பேசிய ஜக­தீஸ்­வ­ரன், மொழி­பெ­யர்ப்­பா­ளர் மூலம் அந்­தப் பெண்­ணைத் தொடவே இல்லை என்­றார்.

ஒரு கையில் தண்­ணீர் போத்­த­லும் மற்­றொரு கையில் கைப்­பே­சி­யும் இருந்­த­தாக அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 12 ஆண்­டு­க­ளாக வேலை பார்த்து வரு­வ­தா­க­வும் இது போன்ற சம்­ப­வங்­களில் முன்­னெப்­போ­தும் ஈடு­ப­ட்டதில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார்.

வெளி­நாட்டு ஊழி­யர் தன்­னைத் தற்­காத்­துக்கொள்ள நீதி­பதி வாய்ப்பு அளித்­தி­ருந்­தார்.

இதற்­கி­டையே கொவிட்-19 சோதனை உள்­ளிட்ட சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், மருத்­துவ அறிக்­கைக்­குக் காத்­தி­ருப்­ப­தாக அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் தெரி­வித்து இருந்­த­னர்.

ஜக­தீஸ்­வ­ரனை $15,000 பிணை­யில் விடு­விக்க நீதி­பதி அனு­மதி அளித்­துள்­ளார். டிசம்­பர் 22ஆம் தேதி அவர் மீண்­டும் விசா­ர­ணைக்கு வர வேண்­டும்.

அவர் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால் பத்து ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை, பிரம்­படி விதிக்­கப்­ப­ட­லாம்.