பெட்டி பெட்டியாக சிகரெட்; மூன்று மலேசியர்கள் கைது

பெட்டி பெட்டியாக சிகரெட்; மூன்று மலேசியர்கள் கைது

1 mins read
4a251195-45c2-48eb-bd82-51e4d3342cb8
அதிகாரிகள் கைப்பற்றிய வாகனங்கள், சிகரெட்டுகள். படம்: போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு -

பெட்டி, பெட்­டி­யாக சுங்­க­வரி செலுத்­தா­மல் கடத்­தப்­பட்ட சிக­ரெட்­டு­களை சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

இதன் தொடர்­பில் ஈசூ­னில் மூன்று பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். ஈசூன் இஸ்­டஸ்­டி­ரி­யல் ஸ்தி­ரீட் 1ல் உள்ள தொழில் கட்­ட­டத்­தின் ஓர் இடத்­தில் நிறுத்திவைக்­கப்­பட்­டி­ருந்த இரண்டு வாக­னங்­க­ளி­லி­ருந்து சுங்­க­வரி செலுத்­தப்­ படாத 512 கார்ட்­டன், 759 சிக­ரெட் பெட்­டி­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர். இதை­ய­டுத்து 28 முதல் 33 வயது வரை­யி­லான மூன்று மலே­சி­யர்­கள் கைதா­கி­னர்.

வாக­னங்­களில் ரக­சிய இடத்தை உரு­வாக்கி சிக­ரெட்­டு­களை அவர்­கள் மறைத்து வைத்­தி­ருந்­த­தாக நேற்று வெளி­யிட்ட தக­வ­லில் சுங்­கத் துறை தெரி­வித்­தது.

இரண்டு வெவ்­வேறு இடங்­களில் நிறுத்திவைக்­கப்­பட்­டி­ருந்­த மேலும் இரண்டு வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இவற்­றை­யும் சிக­ரெட் கடத்­து­ வ­தற்­காக அவர்­கள் பயன்­ப­டுத்­தி­னர் என நம்­பப்­ப­டு­கிறது.

சுங்­க­வரி செலுத்­தாத சிக­ரெட்­டு­களை வாக­னங்­க­ளி­லி­ருந்து இறக்குவ­தற்­காக மலே­சி­யா­வைச் சேர்ந்த ஒரு நபரை அவர்­கள் வேலைக்கு அமர்த்­தி­யி­ருந்­த­னர். கைப்­பற்­றப்­பட்ட சிக­ரெட்­டு­க­ளுக்கு மொத்­தம் செலுத்த வேண்­டிய சுங்க வரி $50,200, பொருள் சேவை வரி 3,900 வெள்ளி. சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரு­கின்­ற­னர்.