போதைப்பொருள் புழங்கியின் சிறுநீர் மாதிரியை மாற்றிய அதிகாரிகள்

போதைப்பொருள் புழங்கியின் சிறுநீர் மாதிரியை மாற்றிய அதிகாரிகள்

2 mins read
0bfc23d0-7430-44d9-8134-fd2ce1108e62
-

போதைப்­பு­ழங்­கி­யான மாவுங் மோ மின் ஊயின் சிறு­நீர் மாதி­ரியை மாற்றி தனது சிறு­நீரை பரி­சோ­த­னைக்கு அனுப்­பிய மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவை (சிஎன்பி) சேர்ந்த இரு அதி­கா­ரி­க­ளுக்கு நேற்று சிறை தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

வேலையை விட்டு நீக்­கப்­பட்ட 46 வயது அப்­துல் ரஹ்­மான் காதி­ருக்கு இரண்டு ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

பிப்­ர­வ­ரி­யில் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வி­லி­ருந்து பதவி வில­கி, குற்றம் சுமத்தப்பட்ட மற்­றொரு 34 வய­தான முஹம்­மது ஸுஹைரி ஸைனு­ரிக்கு ஓராண்டு 10 மாதங்­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. இரு­வ­ரும் சேர்ந்து கூட்­டுச் சதி­யில் ஈடுபட்­ட­தாக விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது. இரு­வ­ரும் தலா ஒரு குற்­றச் சாட்டின்மீது குற்­ற­வா­ளி­கள் எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

இவ்­வி­ரண்டு குற்­ற­வா­ளி­க­ளை­விட அப்­துல் ரஹ்­மான் குற்­றச்­செ­ய­லுக்கு அதிக கார­ண­மா­ன­வர் என்று நீதி­பதி விக்­டர் இயோ தெரி­வித்­தார். குற்­றம் புரிந்­த­வர்­கள் குழுத் தலை­வ­ராக விளங்­கிய அப்­துல் ரஹ்­மான் குற்­றச்­செ­யலை தடுத்­தி­ருக்க வேண்­டும் என்­றார் அவர்.

இந்த வழக்கு தொடர்­பில், 3வது அதி­கா­ரி­யான 41 வய­தான முஹ­மட் ஹஃபீஸ் லான், தம் மீது சுமத்­தப்பட்ட குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு ஆகஸ்ட் 2020ல் 18 மாத சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

32 வய­தான மாவுங் மோ மின் ஊவும், ஒரு தாய்­லாந்து பெண்­ணும் ஆகஸ்ட் 15, 2018 அன்று இரவு 11 மணி­ய­ள­வில் உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டி­யில் போதைப் பொருள் உட்­கொண்ட சந்­தே­கத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­ட­னர் என்று அரசு தரப்பு வழக்­க­றி­ஞர் கூறி­னார். சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த மாவுங், 'மெத்­த­பீட்­ட­மைன்' போதைப் பொருளை உட்­கொண்­ட­தால், தனது சிறு­நீர் மாதிரி பரி­சோ­த­னை­யில் இது தெரியவரும் என்று பயந்­தார். இதற்கு முன்­னர் போதைப்­பொ­ருள் மறு­வாழ்வு மையத்­திற்கு (டிஆர்சி) அனுப்­பப்­பட்ட மாவுங், மீண்­டும் பிடி­பட்­டால், இரண்­டா­வது முறை­யாக டிஆர்­சிக்கு அனுப்­பப் படு­வோம் என்­பதை மாவுங் அறிந்­தி­ருந்­தார். இத­னால், அவ­ரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து விடு­வார் என்­றும் அதைத் தொடர்ந்து, அவ­ரின் பிள்­ளை­களை அவ­ரால் பார்க்க முடி­யாது என்­றும் அஞ்­சி­னார்.

இத­னால் ​மாவுங், அதி­கா­ரி­யான அப்­துல் ரஹ்­மா­னி­டம் உட­னடி சிறு­நீர் மாதி­ரி­யில் எந்த போதைப்­ பொரு­ளும் இல்லை என்று கூற உத­வு­மாறு கேட்­டுக்கொண்­டார்.

இதற்­கி­டை­யில், சிறு­நீர் பரி­சோ­த­னைக்கு ஹஃபீஸ் தனது சிறு­நீர் மாதி­ரியை பரி­சோ­த­னைக்கு அனுப்­பி­னார். இத­னால் போதைப்பொருள் தொடர்­பில் சிக்­கா­மல் தப்­பித்த மாவுங், அந்த தாய்­லாந்து பெண்­ணு­டன் மலே­சி­யா­வுக்குச் செல்ல முடிந்­தது. 17 ஆகஸ்ட் 2018 அன்று உட்­லண்ட்ஸ் சோத­னைச் சாவ­டி­யில் வேறு போதைப் பொருள் ஒழிப்­புப் பிரி­வின் குழு­வி­னர் மாவுங்கை தடுத்து நிறுத்தி சிறு­நீர் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது இந்­தக் குற்­றம் வெளிச்­சத்­துக்கு வந்­தது. குற்­றம் சுமத்­தப்­பட்ட ஸுஹை­ரிக்­கும் அப்­துல் ரஹ்­மா­னுக்­கும் பிணைத் தொகை $20,000 நிர்­ணை­யிக்­கப்­பட்­டது. மேலும், அப்­துல் ரஹ்­மான் மீது துறை ரீதியாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.