ஓடும் காரைப் பிடித்தவாறு 10 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டவர் மருத்துவமனையில்

ஓடும் காரைப் பிடித்தவாறு 10 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டவர் மருத்துவமனையில்

1 mins read
3473e61a-291c-43fe-90c5-6ab39c79af36
படம்: ஷின் மின் -
multi-img1 of 3
Google News Preferred Icon

சண்டையில் வேறொருவரது காரின் 'ஸ்டியரிங் வீலை' விடாப்பிடியாகப் பிடித்த ஒரு நபரை, அந்த கார் சுமார் 10 மீட்டருக்கு இழுத்துச் சென்றது. தலையில் காயம் ஏற்பட்டதால் அந்நபர் டான் டோக் செங் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அச்சம்பவம் கேலாங்கில் நடந்ததாக ஷின் மின் செய்தித்தாள் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

காயமடைந்த நபருக்கும் ஒரு கறுப்பு காரின் ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கறுப்பு கார் தமது காரை உரசி கீறல் ஏற்படுத்தியதாக நம்பிய ஆடவர், அந்த காரின் 'ஸ்டியரிங் வீலை' பிடித்தார். கார் கிளம்பியபோதும் அவர் விடவில்லை. சுமார் 10 மீட்டர் இழுத்துச்செல்லப்பட்ட பின்னர் அதை விட்டதும், லாரிக்கு அடியில் விழுந்தார்.

அவ்விடத்தை விட்டு கிளம்பிய கறுப்பு கார் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று ஷின் மின் கூறியது.