'பிளாக் ஃபிரைடே' எனப்படும் பிரபலமான பொருள்கள் வாங்கும் நாள் நேற்று நடந்தேறியது. அடுத்த ஆண்டு ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி 7 விழுக்காட்டி லிருந்து 8 விழுக்காட்டுக்கு உயர விருக்கிறது. அதற்கு முன்னதாக பொருள்களை வாங்கும் நோக்கு டன், வாடிக்கையாளர்கள் பலர் நேற்று 'பிளாக் ஃபிரைடே' தள்ளு
படிகளைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கினர்.
இதில், பல விற்பனையாளர்கள் பலவிதமான தள்ளுபடிகளையும் பல கவர்ச்சியான சலுகைகளையும் வழங்கினர்.
சிங்கப்பூரில் உள்ள பல கடைகள் இந்த சலுகை நாள்களை முன்னிட்டு, அதிக வாடிக்கையாளர்களை எதிர்பார்க்கின்றன. அதற்கு ஏற்ப கடைகளையும் பொருள்களையும் அவை தயார் செய்கின்றன.
வரும் திங்கள் நடைபெறவிருக்கும் 'சைபர் மண்டே' அன்றும் பலர் பொருள்களை குறைந்த விலைக்கு இணையத்தில் வாங்கலாம்.
அடுத்த ஆண்டில், பொருள் சேவை வரி அதிகரிப்பால், பல சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் செலவழிப்பதை குறைக்க முடிவெடித்திருப்பதாக 'யூகவ்' நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதனால், இந்தச் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் முழுமையாக பயன்படுத்தி, அடுத்த ஆண்டுக்கு தேவையான பொருள்களை இந்த நாள்களில் வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஆய்வில் தெரியவந்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் மார்ச் 15 வரை 18 நாடுகளில் வாடிக்கையாளர்களிடன் யூகவ் கருத்துத் திரட்டியது. இந்தப் பட்டியலில், 'பிளாக் ஃபிரைடே' செலவுகளின் அடிப்படையில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில், நவம்பர் 11ஆம் தேதி (11.11) நடைபெற்ற 'சிங்கிள்ஸ் டே' விற்பனைத் திருவிழா செலவுகள் அடிப்படையில், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஈராண்டுகளுக்கும் மேலாக தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட உள்ளூர்க் கடைகள் இணையவர்த்தகங்களுடன் போட்டியிட சிரமப்பட்டன.
11.11 மற்றும் 'பிளாக் ஃபிரைடே' போன்ற ஆண்டு இறுதி விற்பனைநிகழ்வுகள் உள்ளூர் விற்பனைத் துறைக்கு மிகவும் உதவியுள்ளன.
செப்டம்பரில் நடத்தப்பட்ட மற்றொரு யூகவ் ஆய்வு, சிங்கப்பூர் வாடிக்கையாளர்களை மட்டும் கருத்தில் கொண்டது.
இதில், 'பிளாக் ஃபிரைடே' விற் பனையின்போது 44 விழுக்காட்டினர் பொதுவாக $101 முதல் $500 வரை செலவழிப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட 25 விழுக்காட்டினர் $51 முதல் $100 வரை செலவிடுவதாகக் கூறினர்.
உடலழகுப் பராமரிப்புப் பொருள் கள் மற்றும் அழகு சாதனங்கள், மின்னியல் சாதனங்கள், நவநாகரிக ஆடைகள் ஆகியவை பிரபலமாக வாங்கப்படும் பொருள்களில் இடம்பிடித்த முதல் மூன்று.
ஆண்டு இறுதி விற்பனை சலுகைகள், பரபரப்பான ஆண்டிற்கு பிறகு பலருக்கு ஆறுதல் அளிக்கும் என்று யூகவ் ஆய்வு கூறியது.
இதில், 'ரீட்டைல் தெரப்பி' என்று அழைக்கப்படும் பொருள்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியும் சுய அதிகாரமும் இந்தச் சலுகை நாள்கள் மூலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எண்ணத்தின் காரணமாக, குறைந்த விலைக்கு இப்போதே பொருள்களை வாங்கு வதன் மூலம் செலவுகளை குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விழாக்காலத்தை முன்னிட்டு பரிசுகள் வாங்கும் பொது வாடிக்கையாளர்களின் பண்டிகை குறித்த மனநிலையை மேம்படுத்த இந்த விற்பனை நாள்கள் அனு
மதிக்கின்றன.

