முனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் மூத்தோர் தொண்டூழியம்

முனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் மூத்தோர் தொண்டூழியம்

2 mins read
6eb3ca8f-d334-4b2e-850e-49d7ddb5d1c5
-
Google News Preferred Icon

நினை­வுத்­தி­றன் குறை­பா­டு­க­ளு­டன் அங் மோ கியோ­வில் உள்ள பகல்­நே­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் தங்கி இருக்­கும் மூத்­தோர் தங்­களை சுறு­சு­றுப்­பாக வைத்­துக்­கொள்­ள­வும் நினை­வுத்­தி­றன் குறை­பாட்­டி­லி­ருந்து மீள­வும் தொண்­டூ­ழி­யச் சேவை­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

பாலர் பள்ளி, தொடக்­கப் பள்ளி மற்­றும் ஆல­யங்­களில் அவர்­கள் சேவை புரி­கின்­ற­னர்.

Awwa எனப்­படும் சமூக சேவை அமைப்பால் தொடங்­கப்­பட்­டுள்ள இந்த முன்­னோ­டித் திட்­டத்­திற்கு லிவென் பவுண்­டே­ஷன் என்­னும் கொடை அமைப்பு இணை ஆத­ரவு வழங்­கு­கிறது.

பாலர் பள்­ளிக் குழந்­தை­க­ளுக்­குப் பாடங்­களை வாசிக்­க­வும் தொடக்­கப் பள்ளி மாண­வர்­க­ளு­டன் இணைந்து காய்­க­றித் தோட்­டம் அமைக்­க­வும் மூத்­தோர் ஈடு­

ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர்.

அந்த வகை­யில் பாசிர் ரிஸ்­ஸில் உள்ள இலி­யாஸ் பார்க் தொடக்­கப் பள்ளி, அங் மோ கியோ­வில் உள்ள ஜாமியா குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யம், சிராங்­கூ­னில் உள்ள ஸ்ரீ தரும முனீஸ்­வ­ரர் ஆல­யம் ஆகி­ய­வற்­றில் மூத்­தோர் தொண்­டூ­ழி­யச் சேவை ஆற்றி வரு­கின்­ற­னர்.

பொது­வாக, பகல்­நே­ரப் பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் தங்­கி­யி­ருக்­கும் நினை­வுத்­தி­றன் குறை­பாடு உள்ள மூத்­தோர் மறு­வாழ்வு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­துப்­ப­டு­வது வழக்­கம். வண்ணமி­டு­தல், புதிர்ப் போட்டி விளை­யாட்­டு­கள் போன்­ற­வற்­றில் அவர்­கள் ஈடு­ப­டு­வர்.

முன்­னோ­டித் திட்­டத்­தின்­கீழ் அவர்­களை தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட வைக்­கும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

"பாதிக்­கப்­பட்ட மூத்­தோ­ரின் செயல்­தி­றனை ஊக்­கு­விக்க அவர்­களை ஈடு­பட வைக்­கும் நட­வ­டிக்­கை­கள் அர்த்­த­முள்­ள­வை­யாக இருப்­பது அவ­சி­யம்.

"மேலும் அவர்­க­ளின் விருப்­பங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்­டும்," என்று விளக்­கி­னார் Awwa சமூக சேவை அமைப்­பின் மூத்­தோர் பரா­ம­ரிப்பு மற்­றும் சுகா­தா­ரப் பிரிவு இயக்­கு­நர் சாய்­ராம் ஆஸாத்.

ஆல­யத்­தில் பூஜைக்­காக தட்­டில் வைக்­கப்­படும் பொருள்­களை நினைவில் வைக்க மூத்­தோ­ருக்­குப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.