நீண்டகால கொவிட்-19 நோயாளிகளுக்கு உதவும் செயலி அடுத்த காலாண்டில் அறிமுகம்

நீண்டகால கொவிட்-19 நோயாளிகளுக்கு உதவும் செயலி அடுத்த காலாண்டில் அறிமுகம்

2 mins read
d5342f08-92be-41db-baeb-0496fb7e1ebf
வீட்டிலிருந்தவாறே உடற்பயிற்சி செய்து சுறுசுறுப்பை மீண்டும் பெறும் வகையில் 'மூவிட்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. படம்: சாவ்பாவ் -

நீண்­ட­கால கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­ கள் தங்­கள் வீட்­டி­லேயே இருந்­த­படி உடற்­ப­யிற்சி செய்து குண­ம­டைய உத­வ­வும், கிரு­மித்­தொற்­றுக்­குப் பின் தங்­க­ளின் உட­லு­ழைப்பை மேம்­ப­டுத்த உத­வ­வும் 'மூவிட்' (MoveID) எனப்­படும் திறன்­பேசிச் செயலி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இத­யத்­து­டிப்பைக் கண்­ட­றிய கைவி­ர­லில் பொருத்­தப்­படும் கருவி, ரத்­தத்­தின் உயிர்­வாயு அள­வைக் கணக்­கிட உத­வும் SpO2 சென்­சார் ஆகி­ய­வற்­றோடு இணைந்து இந்தச் செயலி, உடற்­ப­யிற்­சி யோச­னை­களை நோயா­ளி­க­ளுக்கு வழங்­குகிறது.

அடுத்த ஆண்டு, முதல் காலாண்­ டில் இந்­தப் புதிய செயலி வெளி­யி­டப்­படும் என்று எதிர்­பார்க்­கப்

­ப­டு­கிறது.

நீண்­ட­கால கொவிட்-19 நோயா­ளி­களை நேரடியாக உடற்­ப­யிற்சி வகுப்­பு­க­ளுக்கு வர­வ­ழைப்­ப­தற்கு மாறாக வீட்­டில் இருந்­த­ப­டியே தங்­ க­ளுக்கு வச­திப்­படும் வகை­யில் உடற்­ப­யிற்சி செய்­யும் சேவை­

வ­ழங்­கு­வ­தும் இச்­செ­ய­லி­யின் நோக்­கம்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் வழக்­க­ மான செயல்­பாட்டு நிலை­க­ளுக்­குத் திரும்­பு­வ­தில் சிர­மம் உள்­ள­வர்­க­ளுக்கு, குறிப்­பாக வய­தா­ன­வர்­க­ளுக்கு உத­வு­வதை இந்த உடற்­ப­யிற்­சித் திட்­டம் நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளது. நோயா­ளி­கள் இதற்­குத் தகு­தி­பெ­றும் நிலை­யில், தற்­போ­தைய உடல்­ந­லத்­தைத் தீர்­மா­னிக்க தங்­க­ளது உடல் இயக்க மருத்­து­வ­ரு­டன் ஓர் ஆரம்ப மதிப்­பீட்­டுச் சோத­னை­யைப் பெறு­வர்.

பின்பு இந்தச் செய­லி­யின் வழி, நீண்­ட­கால கொவிட்-19 நோயா­ளி­கள் எட்டு வார உடற்­ப­யிற்­சித் திட்­டத்தை வீட்­டில் தொடங்­கு­வார்­கள். செய­லி­யில் காட்­டப்­படும் உடற்­ப­யிற்­சி­கள் பயன்­ப­டுத்­து­

ப­வர்­க­ளின் உடற்­ப­யிற்சி நிலைக்கு ஏற்ப மாறும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. தொழில்­நுட்ப 'அல்­கா­ரி­தத்தை' பயன்­ப­டுத்தி நோயா­ளி­க­ளுக்­கான பயிற்­சி­களை செயலி மேலும் மேம்­ப­டுத்­தும். திட்­டத்­தின் முடி­வில், பாதிக்­கப்­பட்ட நோயாளி தனது உடல் இயக்க மருத்­து­வ­ரு­டன் இறுதி மதிப்­பீட்­டுச் சோத­னைக்கு உட்­

ப­டுத்­தப்­ப­டு­வார்.

'மூவிட்' செய­லியை பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­கள் தங்­கள் உடற்­ப­யிற்சி அமர்­வு­களை திட்­ட­மிட்­டுக்­கொள்­ள­லாம், தங்­க­ளுக்­கென ஓர் இலக்­கை­யும் நிர்­ண­யித்­துக்­கொள்­ள­லாம். உடல்­நிலை சார்ந்த தக­வல்­கள், வழி­காட்­டி­கள் போன்­ற­வற்றை செயலி மூல­மா­கவே அறிந்­து­கொள்­ள­லாம். செயலி வழி நோயா­ளி­கள் செய்­யும் உடற்­ப­யிற்­சி­யின் விவ­ரங்­களை அவர்­க­ளின் மருத்­து­வர்­கள் அடுத்­த­கட்ட சிகிச்சை வழங்­கு­வ­தற்­குப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

2020ஆம் ஆண்டு டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் மருத்­து­வர்­கள் குழு, உடல் இயக்க மருத்­து­வர்­கள், செயலி தயா­ரிப்­பா­ளர்­கள் ஆகி­யோர் ஒன்­றி­ணைந்து இந்­தச் செய­லியை உரு­வாக்­கும் முயற்­சி­களில் ஈடு­ப­டத் தொடங்­கி­னர். இவ்­வாண்டு மே மாதம் முதல், ​​கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்து, அவர்­

க­ளின் மருத்­து­வர்­க­ளால் இந்த உடற்­ப­யிற்­சித் திட்­டத்­திற்கு பரிந்­து­ரைக்­கப்­படும் நோயா­ளி­க­ளைக் கொண்டு ஓர் ஆய்வு நடத்­தப்­பட்டு­ வ­ரு­கிறது.

'மூவிட்' செய­லியை நுரை­யீ­ரல் சார்ந்த மற்ற நோயா­ளி­க­ளுக்­கும் ஏற்ற வகை­யில் விரி­வு­ப­டுத்­து­வ­தை­யும் இதர அதி­கா­ரத்­துவ மொழி­களில் வெளி­யி­டு­வ­தை­யும் எதிர்­கால இலக்­கா­கக் கொண்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.