ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நகருக்குத் திருப்பிவிடப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானப் பயணிகள் வேறு ஒரு விமானம் மூலம் இன்று முற்பகல் 11 மணிக்கு சிங்கப்பூரில் தரைஇறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சேவை வழங்கும் எஸ்கியூ317 விமானம், விமானி அறையில் ஏற்பட்ட காற்றழுத்தப் பிரச்சினை காரணமாக ஃபிராங்பர்ட் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது. அந்த ஏர்பஸ் ஏ380 ரக விமானம், ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்குப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானம் பழுது பார்க்கப்படுவதாக எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர் கூறினார். பாதிக்கப்பட்ட பயணி களுக்குத் தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எஸ்கியூ9326 என்ற மாற்று விமானம், நேற்றுக் காலை 8 மணிக்குச் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு ஃபிராங்பர்ட் நேரப்படி பிற்பகல் 2.25 மணிக்கு அங்கு தரையிறங்கும். அங்கிருந்து அந்த விமானம் எஸ்கியூ9325 என்ற பெயரில் பிற்பகல் 3.55 மணிக்குப் புறப்பட்டு சிங்கப்பூரில் இன்று முற்பகல் 11.05 மணிக்குத் தரை இறங்கும்.
விமானத்தில் 379 சிப்பந்தி களும் 27 ஊழியர்களும் இருந்ததாகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அனைத்து பயணிகளுக்கும் உதவ ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பயணிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக வும் எஸ்ஐஏ கூறியது.

