செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5958b141-27e1-4224-a06c-93c50a78e487
-
Google News Preferred Icon

ஓடும் காரைப் பிடித்தவாறே பத்து

மீட்டருக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்

சண்டையில் வேறொருவரது காரின் 'ஸ்டியரிங் வீலை' விடாப்பிடியாகப் பிடித்த ஒரு நபரை, அந்த கார் சுமார் 10 மீட்டருக்கு இழுத்துச் சென்றது. தலையில் காயம் ஏற்பட்டதால் அந்நபர் டான் டோக் செங் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அச்சம்பவம் கேலாங்கில் நடந்ததாக ஷின் மின் செய்தித்தாள் நேற்று தெரிவித்தது.

காயமடைந்த நபருக்கும் ஒரு கறுப்பு காரின் ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கறுப்பு கார் தமது காரை உரசி கீறல் ஏற்படுத்தியதாக நம்பிய ஆடவர், அந்த காரின் 'ஸ்டியரிங் வீலை' பிடித்தார். கார் கிளம்பியபோதும் அவர் விடவில்லை. சுமார் 10 மீட்டர் இழுத்துச்செல்லப்பட்ட பின்னர் அதை விட்டதும், லாரிக்கு அடியில் விழுந்தார்.

அவ்விடத்தை விட்டு கிளம்பிய கறுப்பு கார் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று ஷின் மின் கூறியது.

ஏஆர்டி கருவிகளைக் களவாடி விற்ற நிர்வாகிக்கு மூன்று வாரச் சிறை

கொவிட்-19 விரைவுப் பரிசோதனை நிலையத்தை நிர்வகித்த ஒரு மேலாளர், சக ஊழியர் தவறாகக் கணக்கிட்டதால் தேவைக்கு அதிகமான ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள் தருவிக்கப்பட்டதை உணர்ந்ததும், பிரச்சினையைத் தவிர்க்க அதை மூடி மறைக்க நினைத்தார்.

டெங் சியாங்யிங், 28, எனும் அந்தப் பெண், தேக்கா விரைவுக் கிருமிப் பரிசோதனை நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டது. தேவைக்கு அதிகமான ஏஆர்டி கருவிகளை வாங்கியதால் சுகாதார மேம்பாட்டு வாரியத்திடமும் தமது நிறுவனத்திடமும் பிரச்சினையில் சிக்கி விடுவோம் என்று டெங் அஞ்சினார்.

அவரது சக ஊழியரும் சுமார் $14,000 வெள்ளி மதிப்புள்ள 103 ஏஆர்டி கருவிகளை அபகரித்தனர். பின்னர் அவற்றில் சிலவற்றை கேரொசெல் மின்தளத்தில் விற்று லாபம் அடைந்தனர்.

அக்குற்றத்துக்காக டெங்குக்கு நேற்று மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், $2,505.25 இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தும்படி அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

'லெமன் ஸ்குவேர் சீஸ் கேக்கை' மீட்டுக்கொள்ள உத்தரவு

கொன்ஃபெக்ஷனரி லெமன் ஸ்குவேர் எனும் நிறுவனம் தயாரித்த சீஸ் கேக்கை சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளும்படி அதன் விநியோகிப்பாளருக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

அனுமதிப்பட்டுள்ளதைவிட அதிகமான சோர்பிக் அமிலம் உணவில் சேர்க்கப்பட்டதை அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

உணவு வகைகளைப் பதப்படுத்த குறிப்பிட்ட அளவு சோர்பிக் அமிலத்தை அதில் சேர்க்க அனுமதிக்கப்படுகிறது.

ஓரியன்ட் பர்ல் குட்ஸ் அண்ட் சர்விசஸ் எனும் நிறுவனம் அந்த சீஸ் கேக்கை பிலிப்பீன்சிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. அதை மீட்டுக்கொள்ளும் பணி நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.