998 மோசடிகளுக்காக 321 பேர்மீது விசாரணை

998 மோசடிகளுக்காக 321 பேர்மீது விசாரணை

1 mins read
96f3466f-1673-419a-bf65-a8f433e39119
-

பல்­வேறு மோச­டி­களில் தொடர்பு இருந்­த­தற்­காக 321 பேரி­டம் காவல் துறை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர். அந்த மோச­டி­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் 9.6 மில்­லி­யன் வெள்­ளிக்கு மேற்­பட்ட தொகையை இழந்­த­னர்.

சந்­தேக நபர்­க­ளுக்கு 998க்கும் மேற்­பட்ட மோச­டி­களில் தொடர்பு இருந்­த­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

அவர்­கள் 16 வய­தி­லி­ருந்து 72 வயது வரை­யி­லா­ன­வர்­கள். அவர்­களில் 197 பேர் ஆட­வர்­கள், 124 பேர் பெண்­கள்.

நண்­பர்­கள் போல் கைப்­பே­சி­யில் அழைத்து நடித்­தது, சிங்­கப்­பூர் மற்­றும் சீனா­வின் அர­சாங்க அதி­கா­ரி­கள் போல நடித்­தது, போலி முத­லீ­டு­கள், வேலை தரு­வ­தாக ஆசை காட்­டி­யது, இணை­யக் காதல் மோசடி, கடன் மோசடி உள்­ளிட்ட பல்­வேறு மோச­டி­களில் அவர்­க­ளுக்கு தொடர்­பி­ருந்­தது.

வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரிவு அதி­கா­ரி­களும் ஏழு நிலப்­பி­ரி­வு­க­ளைச் சேர்ந்த காவல்­துறை அதி­கா­ரி­களும் இரு வாரங்­க­ளாக நடத்­திய சோத­னை­களில் அவர் கள் பிடி­பட்­ட­னர்.

அத்­து­டன் இணைய விளை­யாட்­டு­கள் தொடர்­புள்ள மோச­டிச் சம்­ப­வங்­கள் மீண்­டும் அதி­க­ரித்து வரு­வ­தாக காவல்­துறை கூறி­யது.

தங்­கள் இணைய விளை­யாட்­டுக் கணக்­கு­களை விற்க விரும்பு வோர் போலி இணை­யத்­த­ளங்­களில் அதற்­கான நிர்­வா­கக் கட்­ட­ணத்­தைச் செலுத்தி ஏமா­று­கின்­ற­னர்.

கடந்த பிப்­ர­வரி மாதம் முதல் குறைந்­தது 21 பேர் அவ்­வகை மோச­டி­களில் சிக்கி, சுமார் 86,000 வெள்­ளியை இழந்­து­விட்­ட­னர்.