'சீகேட் சிங்கப்பூர்' தொழில்நுட்ப நிறுவனத்தைக் கொளுத்திவிடப்போவதாக மிரட்டி அதன் மூலம் பிரதமர் லீ சியன் லூங்கை அலைக்கழித்ததாக இன்று சனிக்கிழமை 44 வயது ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சாய் ஃபூய் செட் என்ற அந்த ஆடவர், இஸ்தானாவில் நவம்பர் 7ஆம் தேதி பிற்பகல் சுமார் 1.51 மணிக்கு ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் அந்த மிரட்டல் செய்தியை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அலைக்கழிப்பு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அந்த ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அந்த ஆடவர் மருத்துவக் கண்காணிப்புக்காக மனநலக் கழகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் டிசம்பர் 9ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு ஆறு மாதம் வரை சிறை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாகக் கிடைக்கக்கூடும்.

