சட்டவிரோத இணையத்தளங்கள் வழி சூதாடினால் குற்றம்

சட்டவிரோத இணையத்தளங்கள் வழி சூதாடினால் குற்றம்

1 mins read
cb818fc0-c262-4465-b214-2fba41ad79ef
-

சட்­ட­வி­ரோத இணைய சூதாட்ட தளங்­கள் வழி பந்­த­யம் கட்டி சூதாடு­வது சட்­டத்தை மீறி­ய ஒரு செய­லா­கும்.

அத்­த­கைய குற்­றத்­தைச் செய்­வோ­ருக்குச் சிறைத்­தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம் என்று உள்­துறை அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

அத்­த­கைய சில இணை­யத்­தளங்­கள் தங்­க­ளு­டைய சேவை­களைச் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் சந்தைப்படுத்தி வரு­கின்­றன.

இந்த நிலை­யில், அவற்­றின் மூலம் சூதா­டு­வது ஒரு குற்­றச் செயல் என்­பதை அமைச்­சின் பேச்­சா­ளர் சுட்­டிக்­காட்டி இருக்­கி­றார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடப்­புக்கு வந்த சூதாட்டக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டத்­தின்­படி, அத்தகைய செயல் ஒரு குற்­றம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சிங்­கப்­பூர் பூல்ஸ் நிறு­வ­னம் மட்டும்­தான் லாட்­டரி சூதாட்­டம், விளை­யாட்­டுச் சூதாட்­டச் சேவை­களை நடத்த உரி­மம் பெற்று இருக்­கிறது.

உரி­மம் பெறா­மல் சேவை வழங்­கக்­கூ­டிய அமைப்­பி­டம் பந்­த­யம் கட்டி சூதாடி இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தால், குற்­ற­வா­ளிக்கு ஆறு மாதம் வரை­யி­லான சிறைத்­தண்டனை அல்­லது $10,000 வரை யிலான அப­ரா­தம் அல்­லது இரண்­டும் தண்­ட­னை­யா­கக் கிடைக்­கும்.

காவல்­துறை காலக்­கி­ரம முறைப்­படி அம­லாக்க நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரும் என்று உள்துறை அமைச்சின் பேச்­சா­ளர் மேலும் தெரி­வித்­தார்.