சுற்றுச்சூழல் தோழமை நாடு உத்தி: 5 தொகுதி குடும்பங்களுக்கு மறுசுழற்சிக் குப்பைத்தொட்டி

2 mins read
b6563316-8cf5-4ea8-a8bc-b6609b35134f
ஐந்து தொகுதிகளின் குடும்பங்கள் இந்த நீலநிற மறுசுழற்சிப் பெட்டியைப் பெறலாம். தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை இப்பெட்டியில் சேகரித்து மறுபுழக்கத்திற்கு வித்திடலாம். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம் -

சிங்­கப்­பூர், சுற்­றுச்­சூ­ழ­லுக்­குத் தோழ­மை­மிக்க நாடாக மாறு­வ­தற்கு ஆத­ர­வாக ஐந்து தொகு­தி­களில் வசிக்­கும் குடும்­பங்­க­ளுக்­குப் பல­முறை பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பெட்டி கொடுக்­கப்­ப­டு­கிறது.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் அஞ்­சல் பெட்­டி­யில் தக­வல் சீட்­டு­கள் போடப்­படும். அவற்­றில் விவ­ரங்­கள் இருக்கும். அவற்­றைப் பார்த்து பெட்­டி­யைப் பெறு­வதற்­கான நடை­மு­றை­க­ளைக் குடும்பங்கள் தெரிந்து­கொள்­ள­லாம்.

'நீலப்­பெட்டி' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தப் பெட்­டியை நவம்­பர் முதல் டிசம்­பர் வரை 14 இயந்­திரங்­களில் இருந்து பெற­லாம். அந்த நீல நிறப் பெட்­டியை மடித்து வைத்­துக்கொள்­ள­லாம்.

அந்­தப் பெட்டியில் ஐந்து கிலோ அள­வுக்கு காகி­தம், பிளாஸ்­டிக், உலோ­கம், கண்­ணாடி போன்ற மறு­சுழற்சிப் பொருள்க­ளும் மின்னியல் கழி­வுப் பொருள்­க­ளும் கொள்­ளும்.

ஃபெங்ஷான், செம்­ப­வாங் வெஸ்ட், தெம்­ப­னிஸ் நார்த், இயோ சூ காங், யூஹுவா ஆகிய ஐந்து தொகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு இப்­போது பெட்டி கிடைக்­கும்.

மற்­ற­வர்­க­ளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் முதல் அது விநியோ­கிக்­கப்­படும். முன்­னோடி முயற்­சி­யாக இடம்­பெ­றும் இந்த விநி­யோகச் செயல்­திட்­டம், தேசிய சுற்றுப்­புற வாரியத்தின் 'சரி­யான மறு­சுழற்சி' என்ற இயக்­கத்­தின் கீழ் இடம்­பெறு­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­கள் அதிக பொருள் களை மறு­சுழற்சிக்கு உட்­ப­டுத்­தவும் சரி­யான முறை­யில் அதைச் செய்­யவும் இந்த இயக்­கம் ஊக்­க­மூட்டு­கிறது.

சிங்­கப்­பூர் அடுத்த பத்து ஆண்டு­களில் மறு­சுழற்சி அளவை 70% ஆக ஆக்­க­வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்து அதற்­கான முயற்­சி­களை முடுக்­கி­விட்­டுள்­ளது.

வரும் 2026ஆம் ஆண்­டு­வாக் கில் ஒரு­வர் நாள் ஒன்­றில் போடும் குப்பை அளவில் 20% குறைக்க வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூர் விரும்பு­கிறது.

இந்த இலக்­கு­களை வெற்­றி­க­ர­மான முறை­யில் சாதிப்­ப­தற்­காக 'கழி­வில்லா பெருந்­திட்­டம்', 'சிங்­கப்பூர் பசு­மைத் திட்­டம் 2030' ஆகியவற்றை அது நடைமுறைப்­படுத்தி வரு­கிறது.

நீலப்பெட்­டி­யில் நடு­வில் ஒரு தட்டு இருக்­கும். அதை வெளியே எடுத்து தேவைக்கு ஏற்ப அங்­கும் இங்­கும் நகர்த்தி பெட்டியை இரண்டாக தடுத்து வைத்­துக்­கொள்­ள­லாம்.

குப்­பை­கள் பற்­றிய விவரங்­கள், பெட்­டி­யைத் திறம்­பட பயன்­ப­டுத்­து­வது எப்­படி என்­பதை விளக்­கும் தக­வல்­கள், எந்தெந்த குப்­பைகளை எப்­படி அப்­பு­றப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தைத் தெரி­விக்­கும் தக­வல்­கள் எல்­லாம் பெட்­டி­யின் மீது இடம் பெற்று இருக்­கும்.

பெட்டி நிரம்­பி­ய­தும் அதில் உள்ள பொருள்­களைக் குடி­யி­ருப்புப் பகு­தி­களில் காணப்­படும் நீல நிற மறு­சுழற்சித் தொட்­டி­யில் சேர்க்­க­லாம் அல்­லது மறு­சுழற்சிக் குழாய் குப்­பைத் தொட்­டி­யில் சேர்க்­க­லாம்.

இத­னி­டையே, இந்த மறு­சுழற்சிப் பெட்டி இயக்­கம் சிங்­கப்­பூ­ரின் மறு­பு­ழக்க உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­தும் என்று நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ கூறி­னார்.