செங்காங் தீ விபத்தில் 78 வயது தம்பதி மரணம்

செங்காங் தீ விபத்தில் 78 வயது தம்பதி மரணம்

1 mins read
58d4babf-9462-4970-939a-cec69a8eac1b
தீயில் 14வது மாடி வீட்டின் சன்னல்கள் கருகி சேதம் அடைந்தன.படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை -

செங்­காங் கூட்­டு­ரிமை வீடு ஒன்­றில் நேற்று அதி­காலை ஏற்­பட்ட தீ விபத்­தில் 78 வய­தான கண­வ­னும் மனை­வி­யும் உயி­ரி­ழந்­த­னர்.

எண் 9, ரிவர்­வேல் கிர­செண்­டில் உள்ள கூட்டுரிமை வீட்டின் 14வது மாடி­யில் தீப்­பற்­றி­யது குறித்து அதி­காலை 1 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

தீயைக் கட்­டுக்­குள் கொண்­டு­வர, கண்ணை மறைக்­கும் கரும்­பு­கையின் ஊடே தீய­ணைப்­பா­ளர்­கள் பலவந்தமாக நுழைந்­த­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

வீட்­டி­னுள் மூவர் மயக்­க­நி­லை­யில் காணப்­பட்­ட­னர். அவர்­களில் இரு­வ­ருக்கு இதய இயக்­க­மீட்­புக்­கான முத­லு­தவி சிகிச்­சை அளிக்­கப்­பட்­டது. தொடர்ந்து அவ்­வி­ரு­வ­ரும் செங்­காங் பொது மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். பின்­னர் அவர்­கள் தீப்­புண்­க­ளால் மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

மூன்­றா­ம­வ­ரான 73 வயது ஆட­வர் சிங்­கப்­பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தீச்சம்பவம் காரணமாக, அக்­கம்­பக்­கத்­தில் குடி­யி­ருந்த 150 பேர் பாது­காப்­பான இடங்களுக்கு வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

சம்­ப­வம் நிகழ்ந்த வீடு திரு டான் சிப் எங், திரு­வாட்டி ஏலிஸ் இயோ சியூ சூ ஆகி­யோ­ரின் பெய­ரில் இருப்­ப­தாக சொத்து ஆவ­ணங்­கள் காட்­டுகின்றன.