சுற்றுப்புறம் மீதான மாணவர்களின் அக்கறைக்கு அங்கீகாரம்

மோன­லிசா

சுற்­றுப்­பு­றப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் சமூக அக்­க­றை­யு­டன் ஈடு­படும் மாண­வர்­களை அங்­கீ­க­ரிக்­கும் வண்­ணம் சிங்­கப்­பூர் சுற்­றுப்­புற மன்­றம், 'பள்ளி பசுமை விரு­து­களை' வழங்­கி­யுள்­ளது.

இத­னை­யொட்டி சிங்­கப்­பூ­ரின் நீடித்த நிலைத்­தன்­மையை ஆத­ரிக்­கும் புத்­தாக்­கச் சிந்­த­னை­யு­டைய திட்­டங்­க­ளுக்­கான போட்டி அண்­மை­யில் நடை­பெற்­றது.

பசுமை தொடர்­பில் நடை­முறை சாத்­தி­யம் உள்ள திட்­டங்­க­ளை­யும் பசு­மைப் பொரு­ளி­யலை ஆத­ரிக்­கும் தீர்­வு­களை­யும் பங்­கேற்­பாளர்­கள் சமர்ப்­பித்­த­னர்.

இப்­போட்­டி­யில் பாலர் பள்ளி, தொடக்­கப் பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி, தொடக்­கக் கல்­லூரி, ஏனைய உயர்­கல்­விக் கழ­கங்­கள் ஆகிய பிரி­வு­களில் மொத்­தம் 286 கல்வி நிலை­யங்­க­ளி­லி­ருந்து 300க்கு மேற்­பட்ட திட்­டங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

விரு­த­ளிப்பு நிகழ்ச்சி இம்­மா­தம் 18ஆம் தேதி நடை­பெற்­றது. தொடர்ந்து 21 ஆண்­டு­க­ளாக நடை­பெற்று வரும் இதில் இவ்­வாண்டு 13 கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் விருது பெற்­ற­னர்.

ஜூரோங் பைனி­யர் தொடக்­கக்­கல்­லூரி 'வாண்டா மிஸ் ஜோக்கிம் நீடித்த நிலைத்­தன்மை விருது', 'சிறந்த திரீ ஆர் விருது', 'தலை­சிறந்த சுற்­றுச்­சூ­ழல் திட்ட விருது' என மொத்­தம் மூன்று விரு­து­களைத் தட்­டிச்­சென்­றது.

இந்தத் ­தொ­டக்­கக்­கல்­லூ­ரிக் குழு­வி­னர் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்தைக் கட்­டுப்­ப­டுத்­தும் திட்­டங்­களை முன்­வைத்­த­னர்.

மறு­ப­ய­னீட்டை வலி­யு­றுத்தி, பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆனால் நல்ல நிலை­யில் உள்ள ஆடை­களைப் பல்­வேறு சமூக மன்­றங்­க­ளின்­வழி இரண்டு மாதங்­கள் சேக­ரித்து மறு­சு­ழற்சி செய்­த­னர்.

அதிக போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­படும் சாலை­களில் கூடு­தல் மறு­சு­ழற்சி குப்­பைத்­ தொட்­டி­க­ளை­ இவர்கள் நிறு­வி­னர்.

நீடித்த நிலைத்­தன்­மையை அன்­றாட வாழ்­வில் செயல்­ப­டுத்­தும் வழி­மு­றை­க­ளைக் கற்­பிக்­கும் மூத்­தோ­ருக்­கான சிறப்­புப் பயி­ல­ரங்­கை­யும் இம்­மா­ண­வர்­கள் நடத்­தி­னர்.

இதில் பங்­கு­கொண்ட 17 வயது மாணவி திரு­ம­லர் செந்­தில்­நா­தன், "இப்­போட்­டி­யில் பங்­கு­கொண்­ட­தன் மூலம் சுற்­றுச்­கு­ழ­லைப் பாது­காப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்­து­ கொண்­டேன்.

"அன்­றாட வாழ்­வில் நாம் விழிப்­பு­ணர்­வு­டன் நடந்­து­கொண்­டால் மிகப் பெரிய மாற்­றத்தை நம்மால் உரு­வாக்க முடி­யும்," என்று கூறி­னார்.

இந்த ­வி­ரு­த­ளிப்பு விழா­வில் கல்வி மற்றும் மனி­த­வ­ளத் துணை அமைச்­சர் கான் சியோ ஹுவாங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்­டார்.

விழா­வின் ஓர் அங்­க­மாக, போட்­டி­யில் சமர்ப்­பிக்­கப்­பட்ட சிறந்த திட்­டங்­க­ளின் கண்­காட்சி ஒன்­றும் இடம்பெற்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!