அமைச்சர் மசகோஸ்: ஆண்-பெண் திருமணத்தைப் பாதுகாக்க புதிய சட்டப் பிரிவு சட்டத் திருத்தம் திருமணக் கொள்கைகளைப் பாதுகாக்கும்

திரு­ம­ணம் என்­பது ஆண்-பெண் இரு­பா­லா­ருக்கு இடையே இருக்க வேண்­டும், அந்த உறவு முறை­யில்­தான் பிள்ளை பிறப்பு, வளர்ப்பு இருக்க வேண்­டும் என்ற எண்­ணம் சமு­தா­யத்­தில் வலு­வாக உள்­ளது.

எனவே, இதுவே திரு­ம­ணம் என்­ப­தற்கு விளக்­க­ம­ளித்து இது சட்ட சவால்­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­தாக இருக்­கும் வகை­யில் அர­ச­மைப்­புச் சட்­டத் திருத்­தம் இருக்க வேண்­டும். இதன்­மூ­லம் சமு­தா­யத்­தில் திரு­ம­ணம் பற்­றிய எண்­ணத்தை போற்றிப் பாது­காக்­கும் கொள்­கை­களை கட்­டிக் காக்க முடி­யும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­னார்.

இதில் திரு­ம­ணம் புரிந்த தம்­ப­தி­யர்க்கு முன்­னு­ரிமை வழங்­கும் பொது வீட­மைப்­புக் கொள்­கை­கள், பிள்­ளை­க­ளைத் தத்­தெ­டுப்­பது தொடர்­பான கொள்­கை­கள், ஊட­கங்­களில் ஏற்­பு­டைய தக­வல்­கள், பிள்­ளை­க­ளுக்­கான கல்வி போதனை பற்­றிய கொள்­கை­கள் ஆகி­யவை அடங்­கும் என்று அவர் விளக்­கி­னார்.

அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் புதி­தாக 156 பிரிவு ஒன்று அறி­மு­கப் படுத்­தப்­படும். இதில் திரு­மணப் பந்­தம், அதை முறைப்­ப­டுத்­து­வது, கட்­டிக்காப்­பது எவ்­வாறு என்று தெளி­வு­ப­டுத்­தப்­படும்.

அத்­து­டன், இந்த சட்டத் திருத்­தம் ஆண்-பெண் இரு­பா­லா­ருக்கு இடை­யே­யான திரு­மணப் பந்­தத்தை அரசு சார்பு பொதுத் துறை அமைப்பு கள் பாது­காக்க, ஆத­ர­வ­ளிக்க, போற்ற, ஊக்­கு­விக்க வழி­வ­குக்­கும் என்­றும் அமைச்­சர் சொன்­னார்.

ஒத்த பாலீர்ப்­பு­டைய ஆண் சேர்க்­கை­யைக் குற்­ற­மா­கக் கரு­தும் குற்­ற­வி­யல் தண்­ட­னைச் சட்­டப் பிரிவு 377Aவை நீக்­கு­வது தொடர்­பான விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய அமைச்­சர், மாதர் சாச­னம் 1961ஆம் ஆண்டு இயற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து மக்­கள் செயல் கட்சி அர­சாங்­கம் திரு­மண உறவு, குடும்ப உறவுமுறை ஆகி­ய­வற்­றை வலு­வாக ஆத­ரிப்­ப­தில் நிலை­யான கொள்­கையைக் கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

அர­சின் பல்­வேறு கொள்­கை­களும் திரு­ம­ணம், குடும்­பம் ஆகி­ய­வற்­றைப் பிர­தி­ப­லிப்­ப­து­டன் இவற்றை மறு­உ­று­திப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. இதில், திரு­மணப் பந்­தத்­தில் பிறக்­கும் குழந்­தை­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பது உட்­பட, ஓரின திரு­மண பந்­தத்­துக்கு ஆத­ரவு மறுப்­பது, திட்­ட­மிட்ட ஒற்­றைப் பெற்­றோர் வாழ்க்கை முறைக்கு, அது வாட­கைத் தாய் மூல­மா­கப் பெறப்­பட்­டாலோ மருத்­துவ உதவி மூலம் நிகழ்ந்த குழந்தை பிறப்­பாக இருந்­தாலோ, அவற்­றுக்­கும் ஆத­ர­வ­ளிக்க கொள்­கை­களில் இட­முண்டு.

இது­போல், பாலர் பள்­ளி­க­ளி­லும் பள்­ளி­க­ளி­லும் திரு­ம­ணம் என்­றால் ஆண்-பெண் இரு­வ­ருக்­கும் இடை­யி­லான ஒன்று என்­றும் குடும்­பம்­தான் சமு­தா­யத்­தின் அடிப்­படை அங்­கம் என்­றும் போதிக்­கப்­ப­டு­வதாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

அத்­து­டன், ஊட­கங்­களில் பாரம்­ப­ரிய முறை­யி­லான குடும்­பங்­கள் அல்­லாத படங்­கள், காட்­சி­கள் இடம்­பெற்­றால் அவற்றை வயது முதிர்ந்­த­வர்­கள் மட்­டுமே பார்க்க முடி­யும் என்­ப­து­டன் நூல­கங்­களில் சிறு வய­துப் பிள்­ளை­கள் படிக்­கும் புத்­தகங்­களில் இது­போன்ற கதை­யம்­சம் இருக்­காது.

"சிங்­கப்­பூ­ரின் பொதுக் கொள்கை என்­பது ஆண்-பெண் திரு­மணப் பந்­தம், அதன்­வழி ஏற்­படும் குடும்­பங்­க­ளை­ ஊக்­கு­விப்­ப­தா­கவே இருந்து வந்­துள்­ளது," என்று கூறிய அமைச்­சர் மச­கோஸ், "வெளி­நாட்டு ஓரின திரு­ம­ணத்­துக்கு சிங்­கப்­பூ­ரில் சட்ட அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட மாட்­டாது," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!