சட்டப்பிரிவு 377A: வாக்களிப்பில் பாட்டாளிக் கட்சியில் கொறடா உத்தரவு இருக்காது

சட்டப்பிரிவு 377A: வாக்களிப்பில் பாட்டாளிக் கட்சியில் கொறடா உத்தரவு இருக்காது

2 mins read
d3e5fb20-b019-4555-b054-93aa34d9c0b1
-

சட்­டப்­பி­ரிவு 377Aயை மீட்­டுக்­கொள்­வ­தன் தொடர்­பி­லான நாடா­ளு­மன்ற வாக்­க­ளிப்­பில் பாட்­டா­ளிக் கட்­சி­யைச் சேர்ந்த மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­கள் மனச்­சாட்­சிப்­படி வாக்கு அளிக்க அனு­ம­திக்­கும் வகை­யில் பாட்­டா­ளிக் கட்­சி­யின் கொறடா உத்­த­ரவு இருக்­காது என்று அக்­கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரும் நாடா­ளு­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான பிரித்­தம் சிங் கூறி­யுள்­ளார்.

கட்சி உறுப்­பி­னர்­கள் கட்­சி­யின் நிலைப்­பா­டுக்கு ஏற்ப வாக்­க­ளிப்­பதை உறு­தி­செய்ய கொறடா உத்­த­ரவு முறையை கட்­சி­கள் நடை­ முறைப்­ப­டுத்­தும். சில முக்­கிய நேரங்­களில் கட்­டுப் பாடு­களை அகற்­றும் வகை­யில் கொறடா உத்­த­ரவு முறை­யும் அகற்­றப்­ப­ட­லாம்..

மக்­கள் செயல் கட்சி அதன் கொறடா உத்­த­ரவு முறையை அகற்­றா­த­தைச் சுட்­டிய திரு பிரித்­தம், அந்த விவ­கா­ரம் பற்றி பொது­மக்­க­ளி­டையே பல்­வேறு கருத்­து­கள் நில­வு­வ­தால், அதன் தொடர்­பி­லான கருத்­து­கள் நாடா­ளு­மன்­றத்­தில் போது­மான அள­வில் விவா­திக்­கப்­ப­ட­வில்லை என்­றால் மன்­றத்­தின் ஜன­நா­ய­கத் தன்மை நீர்த்­துப்­போ­கும் அபா­யம் இருப்­ப­தா­கக் கூறி­னார்.

சட்­டப்­பி­ரிவு 377A குறித்து பாட்­டா­ளிக் கட்­சி­யின் ஒன்­பது நாடாளு மன்ற உறப்­பி­னர்­களும் வெவ்­வேறு கருத்­து­க­ளைக் கொண்­டுள்­ள­தா­க­வும் இரண்டு நாள் விவா­தத்­தின்­போது அவர்­கள் தங்­கள் தனிப்­பட்ட கருத்­து­களை விவ­ரிப்­பர் என்­றும் திரு பிரித்­தம் தெரி­வித்­தார்.

அந்த விவ­கா­ரம் பற்றி இரு­மா­று­பட்ட கருத்­து­கள் கொண்­டி­ருக்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொவிட்-19 தொற்­றால் மன்­றத்­துக்கு வர இய­ல­வில்லை.

சம­யம், மனச்­சாட்சி ஆகி­ய­வற்­றின்­படி அல்­ஜு­னிட் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் ஃபைசஸ் மனாப் சட்­டப் பிரிவு மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு எதி­ராக வாக்­க­ளிக்­க­வுள்­ளார்.

செங்­காங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் லயிஸ் சுவா தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்க முடிவு செய்­துள்­ளார்.

நேற்று பேசிய ஐந்து பாட்­டா­ளிக் கட்சி உறுப்­பி­னர்­களில் அல்­ஜு­னிட் குழுத் தொகு­தி­யைச் சேர்ந்த உறுப்­பி­னர்­க­ளான பிரித்­தம் சிங், சில்­வியா லிம், லியோன் பெரேரா ஆகி­யோர் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வா­கப் பேசி­னர். ஜெரால்ட் கியாம் (செங்­காங்), டெனிஸ் டான் (ஹவ்­காங்) ஆகிய எதி­ரா­கப் பேசி­னர்.

"சிங்­கப்­பூ­ரில் பல­ரும் அதை சம­யக் கண்­ணோட்­டத்­தில் பார்க்­கும் நேரத்­தில் அதே அள­வி­லா­ன­வர்­கள் அதை மனச்­சாட்சி சார்ந்த விவ­கா­ர­மா­கக் கரு­து­வ­தால் சட்­டப்­பி­ரிவு 377A தனித்­து­வ­மா­னது," என்று திரு பிரித்­தம் குறிப்­பிட்­டார்.

சட்­டப்­பி­ரிவு மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தைத் தாம் ஆத­ரிப்­ப­தாக திரு பிரித்­தம் கூறி­னார்.

ஆனால் பன்­மு­கப் பாலீர்ப்­புச் சமூ­கத்­தி­னரை அர­சி­யல் பல­னுக்­கா­கப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்­ப­தற்­காக பாட்­டா­ளிக் கட்சி கடந்­த­கா­லத்­தில் அவர் களுக்கு ஆத­ர­வா­கவோ எதி­ரா­கவோ கருத்து தெரி­விக்­க­வில்லை என்று திரு பிரித்­தம் விளக்­கி­னார்.

"சட்­டப்­பி­ரிவு 377A மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தைப் பாட்­டா­ளிக் கட்சி வெளிப்­ப­டை­யாக ஆத­ரித்­தி­ருந்­தால் அத­னால் சிங்­கப்­பூர் அர­சி­ய­லுக்கு நன்மை இருந்­தி­ருக்­காது என்று நான் நம்­பு­கி­றேன். முக்­கி­ய­மாக பன்­மு­கப் பாலீர்ப்­புச் சமூ­கத்­தி­ன­ரின் நல­னுக்கு அது உத­வி­யி­ருக்­காது," என்­றார் அவர்.

"எதிர்க்­கட்­சித் தலை­வர் என்று பொறுப்பு தரும் புரி­த­லைக் கொண்டு பார்த்­தால், சட்­டப்­பி­ரிவு 377A மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வது குடும்ப அமைப்­புக்கோ சமய நம்­பிக்­கை­யின் சுதந்­தி­ரத்­துக்கோ அர­சாங்­கம் எதி­ராக இருப்­பதை எவ்­வி­தத்­தி­லும் குறிக்­க­வில்லை என்­பது என் தனிப்­பட்ட நம்­பிக்கை," என்று திரு பிரித்­தம் கூறி­னார்.