சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி: சட்டப்பிரிவு 377Aயை மீட்டுக்கொள்ள ஆதரவு; பொது வாக்கெடுப்புக்கு கோரிக்கை

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி: சட்டப்பிரிவு 377Aயை மீட்டுக்கொள்ள ஆதரவு; பொது வாக்கெடுப்புக்கு கோரிக்கை

1 mins read
79c3101e-f961-430f-bd7d-56b8ea42a5e2
-

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி குற்றவியல் பிரிவு சட்­டப்­பி­ரிவு 377A மீட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வதை ஆத­ரிக்­கிறது. இருப்­பி­னும் அது திரு­ம­ணம் என்­ப­தன் வரை­யறை பொது வாக்­கெ­டுப்­பின் மூலம் தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டும் என்று கட்சி நம்­பு­­வ­தாக அக்­கட்­சி­யைச் சேர்ந்த தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹேஸல் புவா கூறி­யுள்­ளார்.

சட்­டப்­ பி­ரிவு 377Aயை மீட்­டுக்­கொள்­ளும் அதே வேளை­யில் திரு­மண பந்­தத்­தின் வரை­ய­றை­யைப் பாது­காக்­க­வும் அர­ச­மைப்­புச் சட்டம் திருத்­தப்­ப­டு­வது குறித்தும் நாடா­ளு­மன்ற விவா­தத்­தில் திரு­வாட்டி புவா உள்­ளிட்ட பல உறுப்­பி­னர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

திரு­ம­ணத்­தின் வரை­யறை பற்றி பொது வாக்­கெ­டுப்பை நடத்­து­வது, அந்த விவ­கா­ரம் பற்­றிய அக்­க­றை­யுள்­ள­வர்­கள் தங்­கள் கருத்­து­களை வெளிப்­ப­டுத்த வாய்ப்­ப­ளிக்­கும் என்­றார் திரு­வாட்டி புவா.

அந்த விவ­கா­ரத்­தில் தமது கட்­சிக்­குள் ஒரு­மித்த கருத்து இல்லை என்று அவர் ஏப்­ரல் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­யி­ருந்­தார்.

கட்சி உறுப்­பி­னர்­கள் இந்த விவ­கா­ரத்­தில் தங்­கள் தனிப்­பட்ட கருத்­தைக் கொண்­டி­ருக்க அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் சட்­டத்தை மாற்ற எது சரி­யான தரு­ணம் என்று சமூ­கமே தீர்­மா­னிக்க வேண்­டும் என்று தமது கட்சி அப்­போது நம்­பி­ய­தா­க­வும் அவர் கூறி­னார்.