தேர்வுத்தாள் கசிவுக்கு மனிதத் தவறே காரணம்

தேர்வுத்தாள் கசிவுக்கு மனிதத் தவறே காரணம்

1 mins read
94667111-b998-44d1-a683-6ba05f6e55bd
-

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (என்­டியு) தேர்­வுத் தாள் கேள்­வி­கள் இணை­யத்­தில் கசிந்­த­தற்கு மனி­தத் தவறே கார­ணம் என்று கல்வி துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் கூறி­யுள்­ளார்.

அந்­தச் சம்­ப­வம் பற்றி என்­டியு மேற்­கொண்ட விசா­ர­ணை­யில், தேர்­வுத் தாளின் மின்­னி­யல் பிர­தியை யாரும் திறப்­ப­தைத் தடுப்­ப­தற்­குக் கட­வுச் சொல் சேர்த்­துப் பாது­காக்க நிர்­வாக ஊழி­யர் ஒரு­வர் மறந்­து­விட்­டார் என்று திரு­வாட்டி கான் கூறி­னார்.

அதன் கார­ண­மாக, தேர்வு தொடங்­கும் முன்­னரே மாண­வர்­கள் தற்­செ­ய­லாக அந்தக் கேள்­வி­ களைப் பெற்­று­விட்­ட­னர் என்­றார் அவர்.

அச்­சம்­ப­வம் பற்றி டாக்­டர் வான் ரிஸால் வான் சக்­கா­ரியா (ஜாலான் புசார் குழுத்­தொ­குதி), ஜோன் பெரேரா (தஞ்­சோங் பகார் குழுத்­தொ­குதி) இருவரும் நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு அவர் நேற்று பதி­ல­ளித்­தார்.

நியா­ய­மான மதிப்­பீடு நடைபெறும் வகை­யில், எல்லா மாண­வர்­க­ளுக்­கும் மீண்­டும் வேறு தலைப்­பு­களில் தேர்வு நடத்­தப்­பட்­டது. பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது என்று திருாவட்டி கான் கூறி­னார்.

இது­போன்ற சம்­ப­வங்­களைத் தடுக்க, என்­டியு அதன் உள்­ந­டை­மு­றை­க­ளை­யும் ஊழி­யர்­கள் பெறும் பயிற்­சி­யை­யும் மறு­ஆய்வு செய்­து­ வ­ரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அண்­மைய ஆண்­டு­களில் இது­போன்று தேர்­வுக் கேள்­வி­கள் முன்­கூட்­டிய கசி­ய­வி­டப்­பட்ட சம்­ப­வங்­கள் நடந்­த­னவா என்று டாக்­டர் டான் வூ மெங் (ஜூரோங் குழுத்­தொ­குதி) கேட்­டார். அதற்கு பதில் அளித்த திரு­வாட்டி கான், அத்­த­கைய ஐந்து தனித்­த­னி சம்­ப­வங்­கள் நடந்­த­தா­கத் தெரி­வித்­தார்.