இளம் பெண்களை தந்திரமாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சீன நாட்டவர்

இளம் பெண்களை தந்திரமாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சீன நாட்டவர்

2 mins read
6f652b45-2570-45dd-8bab-149cb065774f
-
Google News Preferred Icon

இளம் பெண்­களை தந்­தி­ர­மாக ஏமாற்றி தனது இச்­சைக்­குப் பயன் ­ப­டுத்­திக் கொண்ட சீன நாட்­ட­வர் மீது மூன்று பாலி­யல் குற்­றச்­சாட்­டு­கள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன.

மேலும் 57 குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­நோக்­கு­கி­றார்.

சீன நாட்­டைச் சேர்ந்த 34 வயது தொழில்­நுட்­ப­ரான லின் ரோங்­ஸின், இளம் பெண்­களை எப்­படி தந்­தி­ர­மாக ஏமாற்றி பாலி­யல் பலாத்­காரத்­துக்கு பயன்­ப­டுத்­திக் கொண்­டதை நீதி­மன்­றத்­தில் விவ­ரித்­தார்.

பதி­னான்கு முதல் 19 வயது வரை­யுள்ள மூன்று இளம்­பெண்­ க­ளுக்கு முத­லில் வலை­வி­ரித்த அவர், தனக்கு ஆபாச படங்­களை அனுப்பும்படி செய்தார்.

அப்போது, தன்னை 19 வயது லின் ஷி ஸுவான் என அவர் காட்டிக் கொண்டார். சில சம்பவங் களில் ஹுவாங் யி என்பவருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று இளம் பெண்களை அவர் வலியுறுத்தினார்.

ஆனால் ஹுவாங் யியும் அவரே என்பது பெண்களுக்குத் தெரியாது.

பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட பிறகு மிரட்டிய நபரிட மிருந்து அவர்களை காப்பாற்றுவதாக லின் கூறினார்.

இதனை நம்பிய மூன்று பெண் களும் அவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டனர்.

மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு களையும் அவர்களின் நிர்வாணப் படங்களை வெளியிடுவதாகக் கூறி மிரட்டிய குற்றச்சாட்டையும் ஒரு பெண் குளிக்கும்போது ரகசியமாக படம்பிடித்த குற்றச்சாட்டையும் நேற்று நீதிமன்றத்தில் லின் ஒப்புக் கொண்டார்.

தோ பாயோவில் தொழிற்பேட்டை கட்டடத்தில் உள்ள கழிவறையிலும் பாலஸ்டியர் ஹோட்டல் அறையிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன.

நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் சோங் கீ இன், இருபது பெண்கள் சம்பந்தப்பட்ட 64 குற்றச்சாட்டுகளை லின் எதிர்நோக்குவதாகக் கூறி னார்.

குற்றச்செயல்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், லின்னுக்கு 22 முதல் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படி களும் விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்த மாதம் 5ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அப்போது லின்னுக்கு தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. லின், 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். தங்குவிடுதியில் மனைவியுடன் வசித்து வந்த அவருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறார்.