மோசடிகளைக் கண்டறிய 400 முதியோர்களுக்குப் பயிற்சி

மோசடிகளைக் கண்டறிய 400 முதியோர்களுக்குப் பயிற்சி

2 mins read
bac6c175-0dcf-4286-925e-03e93dc4e08e
தேசிய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்தோரை சந்தித்துப் பேசிய மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய நூல­கத்­தில் நடந்த நிகழ்ச்சி ­ஒன்­றில் 400க்கும் மேற்­பட்ட மூத்த குடி­மக்­கள், 'சிங்­பாஸ்', 'பேலா' போன்ற அத்­தி­யா­வ­சி­ய­மான செய­லி­களை முறை­யா­கப் பயன்­ ப­டுத்­து­வ­தைக் கற்­றுக் கொண்­ட­னர். மோச­டி­களை அடை­யா­ளம் காண­வும் அவர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்­கப் ­பட்­டது.

முதலாவது, அறி­வார்ந்த தேச தாத்தா, பாட்­டி­ய­ருக்­கான தினம் தேசிய நூல­கத்­தில் சிறப்­பா­கக் கொண்­டா­டப்­பட்­டது.

இதன் ஒரு பகு­தி­யாக 400க்கும் மேற்­பட்ட மூத்த குடி­மக்­களுக்கு அன்றா­டம் பயன்­ப­டுத்­தும் செய­லி­கள் பற்றி கற்றுத்தரப்பட்டன.

பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின் கீழ் செயல்­படும் அறி­வார்ந்த தேச மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் இதற்கு ஏற்­பாடு செய்தது.

நவம்­பர் 27ஆம் தேதி தாத்தா, பாட்­டி­யர் தின­மா­கக் கொண்­டாடப் ­ப­டு­கிறது. இவ்­வாண்­டின் அறி­வார்ந்த தேச தாத்தா, பாட்­டி­யர் தினம், மூத்­தோ­ர் வாழ்க்­கை­யில் தொழில்­நுட்­பத்­தைப் புகுத்­து­வதை நோக்­க­மா­கக் கொண்­டது.

கடந்த செப்­டம்­பர் மாதம் 100க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­களிடையே நடத்­தப்­பட்ட ஆய்­வில் மின்­னி­லக்­கச் சேவை­களில் மூத்­தோர் எவற்றை விரும்­பு­கி­றார்­கள், குடும்­பப் பிணைப்­புக்கு தொழில்­நுட்­பம் எவ்­வாறு உத­வும் என்­பது பற்றி கண்­ட­றி­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து நேற்­றைய நிகழ்ச்சி நடந்தது.

ஆய்­வில் பங்­கேற்ற 18 முதல் 60 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள், மூத்த தலை­மு­றை­யி­னர் திறன்­பே­சியை எப்­படி பயன்­ப­டுத்த வேண்­டும், மோச­டி­க­ளைத் தவிர்ப்­பது எப்­படி என்­ப­தைக் கற்­று­கொள்ள வேண்­டும் என்று கூறி­னர்.

'வாட்ஸ்­அப்' தவிர்த்து இளைய தலை­மு­றை­யி­ன­ரு­டன் தொடர்­பில் இருக்க எந்­தச் செய­லி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது என்பது உறுதி யாக தெரி­ய­வில்லை என்று அறுபது வயதுக்கு மேற்­பட்ட முதி­யோர் தெரிவித்­தி­ருந்­த­னர்.

இதன் தொடர்­பில் மேலும் கற்றுக்­கொள்ள விரும்புவதா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

விக்­டோ­ரியா ஸ்தி­ரீட்­டில் உள்ள தேசிய நூல­கத்­தில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்­சி­யில் 'லயன்ஸ் பீஃபிரெண்­டர்ஸ்' மூத்த தொண்­டூழியர்­க­ளுக்­கான அமைப்பு 'ஆர்­எஸ் விபி'. சிண்டா ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த மூத்­தோர் பங்­கேற்­ற­னர்.

இதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட தொடர்பு, தக­வல் மற்­றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ், திறன்­பேசி மற்­றும் சமூக ஊட­கங்­கள் மக்­க­ளுக்­கான உற­வு ­களை பராமரிக்கும் முறையை மாற்றிய­மைத்­துள்­ளன என்­றார்.

"இந்த மாற்­றங்­களை ஏற்­றுக் கொள்­ளா­விட்­டால் குடும்ப உறுப் பினர்­க­ளின் தொடர்பை இழப்­பது எளி­தா­கி­வி­டும்.

"சில­ருக்கு தனிமையான உல­க­மாக மாறி­வி­டும்," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

முதி­ய­வர்­க­ளுக்கு குடும்ப உறவு மிக­வும் முக்­கி­யம் என்­ப­தால் அன்­றாட வாழ்க்­கை­யில் தேவை­யான மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பங்­களை கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.