மேசையை சுத்தம் செய்யும் இயந்திரம்; சோதனை

உண­வங்­காடி நிலை­யங்­களில் மேசையை சுத்­தம் செய்ய தானி யக்க இயந்­தி­ரங்­க­ளைப் பயன் படுத்­து­வது குறித்து தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் ஆராய்ந்து வரு­கிறது.

இந்­தத் திட்­டம் வெற்றி பெற்­றால் ஆள்­பற்­றாக்­குறை பிரச்­சி­னைக்குத் தீர்­வாக அமை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

குறிப்­பிட்ட உண­வங்­கா­டி­க­ளி­லும் உண­வுக் கடை­க­ளி­லும் மூன்று மாத காலத்­திற்கு இயந்­திர மனி­தனை சோதித்து பார்க்­க­வி­ருக்கிறோம் என்று வாரி­யத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­துள்­ளார்.

மேசையைத் தூய்­மை­யாக்­கும் இயந்­திர மனி­த­னின் செயல்­பாடு பல அம்­சங்­களில் மேம்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

நவம்­பர் 7ஆம் தேதி ஒப்­பந்­தப் புள்ளி கோரிய அறி­விப்­பில் உண­வுத் தட்டை திருப்பி வைக்­கும் கொள்­கை­யால் ஊழி­யர்­க­ளின் பணிச் சுமை குறைந்­தி­ருக்­கிறது என்று வாரி­யம் குறிப்­பிட்­டுள்­ளது.

இருந்­தா­லும் காலி­யான மேசை­யைத் துடைத்து தூய்­மை­யாக்கு வதற்கு தானி­யக்க சாத­னங்­கள் தேவைப்­ப­டு­வ­தாக வாரி­யம் தெரி­வித்து உள்­ளது.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உண­வுத் தட்­டு­களைத் திருப்பி வைப்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது.

அப்­ப­டி­யும் துப்­பு­ர­வா­ளர்­கள் மேசையை சுத்­தம் செய்ய வேண்டி­உள்­ளது.

தட்­டு­களில் எஞ்­சி­யுள்ள உணவை அகற்றி கழுவ அனுப்ப வேண்­டி­யி­ருக்­கிறது. மேசையை சுத்­தம் செய்­யும் தானி­யக்க சாத­னங்­கள் இருந்­தால் ஊழி­யர் களுக்கு பேரு­த­வி­யாக இருக்­கும் என்று வாரி­யத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

தானி­யக்க இயந்­தி­ரம், ஒரு நிமி­டத்­தில் மேசையை சுத்­தம் செய்ய வேண்­டும். ஒரு நிமி­டத்­திற்­குள் ஒரு மேசை­யி­லி­ருந்து மற்­றொரு மேசைக்கு செல்ல வேண்­டும் என்று ஒப்­பந்­தப் புள்­ளி­யில் வாரி­யம் தெரி­வித்துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!