மலேசியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 16 சிங்கப்பூர் பயணிகள் காயமடைந்தனர். இவ்விபத்து திங்கட்கிழமை அதிகாலை மலாக்கா மாநிலத்தின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நிகழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
சுற்றுலாப் பேருந்து ஒன்று 27 பயணிகளோடு கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தபோது மலாக்காவின் ஜெசின் நகரில் லாரி ஒன்றின் பின்பகுதியில் மோதியது.
மறுசுழற்சிப் பொருள்களுடன் அந்த லாரி சென்றுகொண்டு இருந்ததாக ஜெசின் நகர தீயணைப்பு, மீட்பு நிலைய அதிகாரியான அஸ்மான் தேவானான் கூறினார். இந்த மோதலின் விளைவாக, பேருந்தில் பயணம் செய்த 16 பேர் காயமுற்றனர். அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள். இலேசான காயங்களுக்காக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக திரு அஸ்வான் தெரிவித்தார்.
விரைவுச் பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

