சிங்கப்பூரில் ஏறக்குறைய 471,000 குடும்பங்கள் கார் வைத்துள்ளன. அவற்றில் 12 விழுக்காடு, அல்லது 56,250 குடும்பங்களிடம் இரண்டு கார்கள் உள்ளன.
3 விழுக்காட்டிற்கும் குறைவான, அல்லது 14,130 குடும்பங்கள் மூன்று அல்லது அதற்கும் அதிகமான கார்களை வைத்திருக்கின்றன.
போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இத்தகவலைத் தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக கார் உரிமை விகிதம் ஓரளவு சீராக இருப்பதாக அவர் சொன்னார்.

