'நாடாளுமன்றம் சரியான தளம்; வாக்கெடுப்பு அல்ல'

'நாடாளுமன்றம் சரியான தளம்; வாக்கெடுப்பு அல்ல'

2 mins read
2c505fef-ae45-4549-a1f0-cad818c67272
-

திரு­ம­ணம் தொ­டர்­பான கொள்­கை­க­ளைப் பற்றி முடி­வெ­டுக்க நாடா­ளு­மன்­றம்­தான் சரி­யான தளம் என்­றும் பொது வாக்­கெ­டுப்பு மூலம் முடி­வெ­டுப்­பது அல்ல என்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுப்­பது மிக­வும் முக்­கி­யம் என்­றும் குறிப்­பாக, சவால்­மிக்க சமு­தாய விவ­கா­ரங்

­க­ளுக்கு அது மிக­வும் பொருந்­தும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் ஒரே ஒரு முறை மட்­டுமே பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. 1962ஆம் ஆண்­டில் மலே­சி­யா­வு­டன் இணை­வது தொடர்­பாக முடிவெடுக்க அப்­போது பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

அர­ச­மைப்­புச் சட்­டத்­தின்­கீழ் நாட்­டின் இறை­யாண்மை தொடர்­பான விவ­கா­ரங்­கள், ராணு­வம் மற்­றும் காவல்­து­றை­யின் அதி

­கா­ரம் தொடர்­பான விவ­கா­ரங்­கள் குறித்து கேள்வி எழும்­போது பொது வாக்­கெ­டுப்பு நடத்­த­லாம் என்­றார் அமைச்­சர் மச­கோஸ்.

திரு­ம­ணம் தொடர்­பான கொள்­கை­களை நாடா­ளு­மன்­றம் முடி­வெ­டுப்­ப­தற்­குப் பதி­லா­கப் பொது வாக்­கெ­டுப்பு நடத்த வேண்­டும் என்று சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யைச் சேர்ந்த தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹேசல் புவா அழைப்பு விடுத்­தி­ருந்­தார்.

அவ்­வாறு செய்­தால்

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­கள் கட­மை­யைத் தவிர்ப்­ப­தற்­குச் சம­மா­கி­வி­டும் என்­றார் திரு

மச­கோஸ்.

பிரெக்­சிட் தொடர்­பாக பிரிட்

­ட­னில் நடத்­தப்­பட்ட பொது வாக்­கெ­டுப்பை அவர் உதா­ர­ணம் காட்டி­ னார்.

மிக குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்­தில் பிரெக்­சிட்­டுக்கு ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டது.

ஆனா­லும் பலர் அதி­ருப்தி அடைந்து இரண்­டா­வது பொது வாக்­கெ­டுப்­புக்கு அழைப்பு விடுத்­ததை அமைச்­சர் மச­கோஸ் நினை­வூட்­டி­னார்.

இதற்குப் பதிலளித்த திருவாட்டி புவா, 377A சட்டப்பிரிவை நீக்க ஆதரவு தெரிவித்ததன் மூலம் சவால்மிக்க விவகாரங்கள் குறித்து முடிவு எடுக்கும் ஆற்றல் இருப்பதை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி நிரூபித்துள்ளதாகக் கூறினார்.

திரு­ம­ணம் தொடர்­பான கொள்­கை­கள் குறித்து பொது­மக்­

க­ளி­டையே அதிக ஆர்­வம் நில­வு­வதை திரு­வாட்டி புவா சுட்­டி­னார்.

அது­தொ­டர்­பாக முடி­வெ­டுக்க சிறப்பு நிபு­ணத்­து­வம் தேவை­யில்லை என்று தெரி­வித்த திரு­வாட்டி புவா, அதில் பொது­மக்­க­ளின் பங்­கேற்பு மிக பொருத்­த­மா­ன­தாக இருக்­கும் என்று கூறி­னார்.

சவால்­மிக்க விவ­கா­ரங்­கள் குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் முடி­வெ­டுப்­பதே சரி என்­றும் அத்­த­கைய விவ­கா­ரங்­கள் தொடர்­பாக முடி­

வெ­டுக்­கும்­போது அர­சி­யல் ரீதி­

யா­கத் தீர்வு காண்­பது முக்­கி­யம் என்­றார் அமைச்­சர் மச­கோஸ்.

"பொறுப்­புள்ள அர­சாங்­க­மாக இருந்து அனைத்­துத் தரப்­பி­ன­ரின் கருத்­து­க­ளை­யும் உள்­வாங்கி, முடி­வெ­டுத்­துள்­ளோம்.

"கட­மை­யைச் செய்­யா­மல் நீதி­மன்­றத்­தி­டம் விவ­கா­ரத்தை

ஒப்­ப­டைத்­து­விட்டு தப்­பி­வி­ட­வில்லை.

"அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து முன்­னோக்­கிச் செல்­வ­தற்­கான நேரம் கனிந்­து­விட்­டது. இவ்­வ­ளவு கால­மாக நமது சமு­தா­யம் கட்­டிக்­காத்த அமை­தி­யை­யும் நிலைத்­

தன்­மை­யை­யும் நிலை­நாட்டி முன்­னோக்­கிச் செல்ல வேண்­டும்," என்று அழைப்பு விடுத்­தார்

அமைச்­சர் மச­கோஸ்.