சண்முகம்-பிரித்தம் சிங் இடையே கடும் விவாதம்

ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­றப் பட்­டி­யலி

லிருந்து நீக்­கு­வது தொடர்­பா­க­வும் திரு­ம­ணம் தொடர்­பான கொள்­கை­கள் குறித்­தும் பாட்­டா­ளிக் கட்சி உறு­தி­யான நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கட்சி என்ற முறை­யில் முடி­வெ­டுக்­கா­மல் தனிப்­பட்ட கருத்­து­க­ளைத் தெரி­விக்க அதன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அது அனு­மதி வழங்­கி­யதை அவர் சுட்­டி­னார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் என்­கிற முறை­யில் பாட்­டா­ளிக் கட்­சி­யி­னர் கட­மை­யாற்ற தவ­றி­விட்­ட­தாக திரு சண்­மு­கம் குறை­கூ­றி­னார்.

இதற்கு பாட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான பிரித்­தம் சிங் மறுப்பு தெரி­வித்­தார்.

கடந்த இரண்டு நாள்­கள் நடை­பெற்ற விவா­தத்­தில் பாட்­டா­ளிக் கட்­சி­யின் நிலைப்­பாடு முன்­வைக்­கப்­பட்­டு­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

பாட்­டா­ளிக் கட்சி நாடாளு மன்ற உறுப்­பி­னர்­களில் ஆறு பேர் 377A சட்­டப்­பி­ரிவு நீக்­கத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்­தை­யும் மூவர் எதிர்த்­த­தை­யும் அவர் சுட்­டி­னார். அர­ச­மைப்­புச் சட்ட திருத்­தத்தை ஏழு பேர் ஆத­ரித்­த­தா­க­வும் வாக்

களிக்­கப்­போ­வ­தில்லை என்று இரு­வர் கூறி­விட்­ட­தா­க­வும் திரு சிங் தெரி­வித்­தார்.

377A சட்­டப்­பி­ரிவை நீக்­கு­வது தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்­ட­போது பாட்

­டா­ளிக் கட்சி அதன் கொற­டாவை நீக்­கி­யது உண்­மை­யான ஜன­நா­ய­கத்­துக்கு அழ­கல்ல என்­றார் அமைச்­சர் சண்­மு­கம்.

"கொற­டாவை நீக்­கு­வ­தன் மூலம் தமது நாடா­ளு­மன்ற உறுப்பி ­னர்­கள் தங்­கள் கருத்­து­களை வெளிப்­ப­டை­யா­கக் கூறு­வர் என்று திரு சிங் தெரி­வித்­தி­ருந்­தார். இதில் எவ்­வித உண்­மை­யும் இல்லை.

"நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எப்­போ­தும் உண்­மை­யாக இருந்து தங்­கள் கருத்­து­களை வெளிப்­

ப­டை­யா­கக் கூற வேண்­டும்," என்­றார் திரு சண்­மு­கம்.

மக்­கள் செயல் கட்சி கொற­டாவை நீக்­க­வில்லை என்­ற­

போ­தி­லும் அதன் நாடா­ளு­மன்ற உறுப்பி­னர்­கள் தங்­கள் தனிப்­பட்ட கருத்­து­களை முன்­வைத்­ததாக அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!