செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
dff0d7e4-5eb3-42bc-9edd-470f797316d9
-

செம்பவாங், காத்திப் பலதுறை மருந்தகங்களின் திறப்பு ஒத்திவைப்பு

செம்பவாங்கிலும் காத்திப்பிலும் கட்டப்படும் புதிய பலதுறை மருந்தகங்களின் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் நிர்ணயிக்கப்பட்ட தேதியிலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து அவை திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

விநியோகத் தடை, கட்டுமானத் துறையில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் செம்பவாங் பலதுறை மருந்தகம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்றும் காத்திப் பலதுறை மருந்தகம் 2024ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

வேலையிடப் பாதுகாப்பின்மை: தொடரும் விதிமீறல்கள்

வேலையிடப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக தண்டிக்கப்பட்ட 558 நிறுவனங்களில் 50 விழுக்காட்டுக்கும் சற்று அதிக நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறியதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் வேலையிடங்களில் அதிக மரணங்கள் ஏற்படுத்திய காரணங்களான வழுக்கி விழுதல், தடுக்கி விழுதல் போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை மனிதவள அமைச்சின் அமலாக்கப் பிரிவு அதிரடிச் சோதனைகளை நடத்தியது.