ஹி டிங் ரு: வாக்களிக்கப்போவதில்லை, எதிர்காலத்தில் நீதித்துறை ஓரங்கட்டப்படும் அபாயம் உள்ளது

ஹி டிங் ரு: வாக்களிக்கப்போவதில்லை, எதிர்காலத்தில் நீதித்துறை ஓரங்கட்டப்படும் அபாயம் உள்ளது

3 mins read
6037a8b3-ecba-4151-b702-905fdaa8a5a8
-

377A குற்­ற­வி­யல் தண்­ட­னைச் சட்­டப்­பி­ரிவு நீக்­கப்­ப­டு­வதை பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹி டிங் ரு ஆத­ரிக்­கி­றார், இருப்­பி­லும் அர­சமைப்­புச் சட்­டத்­தைத் திருத்த நடத்­தப்­படும் வாக்­க­ளிப்­பில் தாம் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

திரு­ம­ணம் தொடர்­பான கொள்­கை­க­ளைப் பற்றி முடி­வெ­டுக்க நாடா­ளு­மன்­றத்­துக்கு தனிப்­பட்ட, சிறப்­பு­ரி­மையை இப்­போது தந்­தால், எதிர்­கா­லத்­தில் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­படும் சட்­டங்­கள் அர­ச­மைப்­புச் சட்­டத்­துக்கு உட்­பட்­ட­வை­தானா என்­பதை நீதி­மன்­றங்­கள் முடி­வெ­டுப்­பதை தடுக்க அது பாதை வகுத்­து­வி­டும் என்று செங்­காங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்­ற உறுப்­பி­னர் திரு­வாட்டி ஹி அக்­கறை தெரி­வித்­தார்.

பொது­மக்­க­ளின் விருப்­பத்­துக்கு மாறாக நீதி­மன்­றங்­கள் தீர்ப்பு அளிக்­கும் சாத்­தி­யங்­கள் உள்­ளன என்ற அக்­கறை தமக்கு இருக்­கும்­போ­தி­லும் பொது­வாக சிங்­கப்­பூர் நீதி­மன்­றங்­கள் மிகுந்த கவ­னத்­து­டன் முடிவு எடுப்­பதை அவர் சுட்­டி­னார்.

சட்­டங்­களை நிறை­வேற்ற நாடா­ளு­மன்­றம் கொண்­டுள்ள அம்­சத்­துக்கு நீதி­மன்­றங்­கள் மதிப்­ப­ளிப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

இருப்­பி­னும், அடிப்­ப­டைக் கொள்­கையை மறந்­து­வி­டக்­கூ­டாது என்று அவர் சக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார். நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­படும் சட்­டங்­கள் நியா­ய­மா­ன­வை­தானா என்­பதை முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் நீதித் துறைக்கு இருக்க வேண்­டும் என்று திரு­வாட்டி ஹி வலி­யு­றுத்­தி­னார்.

377A சட்­டப்­பி­ரிவை நீக்­கு­வது தொடர்­பாக முடி­வெ­டுப்­ப­தில் நீதி­மன்­றத்­தின் பங்­க­ளிப்பு இல்­லா­மல் அதைத் தற்­போது ஓரங்­கட்­டி­னால் எதிர்­கா­லத்­தில் இது­போன்ற முக்­கிய சட்­டத் திருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்­போது நீதி­மன்­றம் ஓரங்­கட்­டப்­ப­டாது என்­பது என்ன நிச்­ச­யம் என்று திரு­வாட்டி ஹி குரல் எழுப்­பி­னார்.

இதற்கு முன்பு, ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உறவை குற்­றம் எனக் கூறும் 377A சட்­டப்­பி­ரிவை நீக்­கு­வது குறித்­தும் ஆண்-பெண் இல்­லற வாழ்க்­கை­யைப் பாது­காக்க பரிந்­து­ரைக்­கப்­படும் அர­ச­மைப்­புச் சட்ட திருத்­தங்­கள் பற்­றி­யும் நாடா­ளு­மன்­றத்­தில் நடை­பெற்ற விவா­தத்­தில் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர் சில்­வியா லிம் பங்­கேற்­றார்.

இந்­தச் சட்­டத் திருத்­தங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டால் ஆண்-பெண் திரு­ம­ணம் தொடர்­பான கொள்­கை­கள் குறித்­தும் சட்­டங்­கள் குறித்­தும் விளக்­கம் கேட்­ட­க­வும் மாற்­ற­வும் நீதி­மன்­றத்தை நாட முடி­யாது என்று அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

எதிர்­கால அர­சாங்­கம் மட்­டுமே திரு­ம­ணம் தொடர்­பான கொள்­கை­க­ளை­யும் சட்­டங்­க­ளை­யும் மாற்ற முடி­யும் என்று அக்­கறை தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதையே திரு­வாட்டி ஹி மீண்­டும் வலி­யு­றுத்­தி­னார்.

இருப்­பி­னும், செங்­காங் குழுத் தொகு­தி­யின் இன்­னொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜேமஸ் லிம் இதை ஏற்க மறுத்­தார்.

சமு­தா­யம் குறித்து இத்­த­கைய மிக முக்­கி­ய­மான விவ­கா­ரங்­கள் தொடர்­பாக முடி­வெக்க நாடா­ளு­மன்­றம்­தான் சரி­யான தள­மா­கும் என்­றார் அவர்.

377A சட்­டப்­பி­ரிவை நீக்­கா­

வி­டில் ஒத்த பாலீர்ப்­புடைய சமூ­கத்­தி­னர் சில­ருக்கு மன­நல ஆத­ரவு வழங்­கு­வது சிர­ம­மாக இருக்­கும் என்று செங்­காங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு லுயிஸ் சுவா தெரி­வித்­தார்.

"377A சட்­டப்­பி­ரிவை நீக்­கா­மல் வைத்­தி­ருந்­தால் சிங்­கப்­பூர் ஒரு பழைய பஞ்­சா­ங்கம் என்ற தோற்­றத்­தைக் கொடுத்­து­வி­டும்.

"இது ஆசிய நிதி மையம் என்ற சிங்­கப்­பூ­ருக்கு இருக்­கும் கௌர­வத்­தைப் பாதிக்­கும்," என்­றார் திரு சுவா.

ஹாங்­காங், சீனா, ஜப்­பான், இந்­தியா போன்ற நாடு­கள் ஒரே பாலினச் சேர்க்கை குற்­ற­மில்லை எனக் கூறும் சட்­டத்தை நிறை­வேற்­றி­விட்­டதை அவர் சுட்­டி­னார்.