ஜனில் புதுச்சேரி: தேசிய மின்னிலக்கச் சேவைகளில் ஏற்பட்ட தடை 4 மணி நேரம் நீடித்தது

ஜனில் புதுச்சேரி: தேசிய மின்னிலக்கச் சேவைகளில் ஏற்பட்ட தடை 4 மணி நேரம் நீடித்தது

3 mins read
83a33241-59db-40df-838e-af3075c8df41
-

தேசிய மின்­னி­லக்­கச் சேவை­களில் கடந்த ஆண்டு தடை­கள் ஏற்­பட்­ட­போது அவை பொது­வாக ஏறத்­தாழ நான்கு மணி நேரம் நீடித்­த­தா­க தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

சேவைத் தடை ஏற்­பட்­ட­போது 01 விழுக்­காட்­டுக்­கும் குறை­வான பய­னீட்­டா­ளர்­கள் சம்­பந்­தப்­பட்ட மின்­னி­லக்­கச் சேவை­யைப் பயன்

­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­த­தாக அவர் கூறி­னார்.

மின்­னி­லக்­கப் பயன்­பாடு அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அர­சாங்க மின்­னி­லக்­கச் சேவை­கள் தங்­கு­

த­டை­யின்றி சேவை வழங்­கு­வதை உறுதி செய்­ய­வும் சேவை­க­ளின் மீள்­தி­ற­னைப் பற்­றி­யும் ஜூரோங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஷோன் ஹுவாங் நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி கேட்­டார்.

அர­சாங்­கத்­தின் முக்­கிய மின்­னி­லக்­கச் சேவை­களில் தடை ஏற்­பட்டு அவை நீண்­ட­நே­ரத்­துக்­குத் தொடர்ந்­தால் பொது­மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் மாற்று வழி­கள் குறித்து திரு ஹுவாங் கேள்வி எழுப்­பி­னார்.

இதற்­குப் பதி­ல­ளித்த டாக்­டர் ஜனில், கடந்த ஆண்டு அர­சாங்க மின்­னி­லக்­கச் சேவை­களில் தடை ஏற்­பட்­ட­போது அவை கிட்­டத்­தட்ட நான்கு மணி நேரம் நீடித்­ததா­கக் கூறி­னார்.

"அர­சாங்க மின்­னி­லக்க சேவை­க­ளின் பெரும்­பா­லான கட்­ட­மைப்­பு­கள் 'வர்த்­தக கிள­வுட் ஹோஸ்ட்­டிங்' பயன்­ப­டுத்­து­வ­தாக அவர் தெரி­வித்­தார். பொது­வா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் தளங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது இந்த 'வர்த்­தக கிள­வுட் ஹோஸ்ட்­டிங்' தனி ஒரு கட்­ட­மைப்பை நம்பி இருப்­ப­தில்லை.

செய­லி­க­ளும் இணை­யத்­

த­ளங்­களும் மெய்­நி­கர் மற்­றும் வழக்­க­மா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் கிள­வுட் கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்­து­கிறது. இதன் விளை­வாக மேலும் பல­ரால் இவற்­றைப் பயன்­ப­டுத்த முடி­கிறது. அதே சம­யம் கூடு­தல் நீக்­குப்­போக்­குத் தன்மை உறுதி செய்­யப்­ப­டு­கிறது," என்­றார் டாக்­டர் ஜனில்.

சேவைத் தடை ஏற்­பட்­டால் அதற்­குப் பதி­லாக பயன்­ப­டுத்­தக்­கூ­டிய மாற்று வழிக்­கான ஏற்­பா­டு­ க­ளை­யும் அர­சாங்­கம் எடுத்­துள்­ளதை அமைச்­சர் ஜனில் சுட்­டி­னார். சேவைத் தடை ஏற்­பட்­டால் அதை உட­ன­டி­யா­கக் கண்­ட­றி­யும் ஆற்­றல் கொண்ட முறை­யும் நடப்­பில் உள்­ளது என்­றும் சேவைத் தடை­யின் தாக்­கத்தை இது குறைப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

முக்­கிய அர­சாங்­கப் பரி­வ­ர்த்­

த­னை­களை பொது­மக்­கள் இணை­யத்தை அதி­கம் நம்­பி­யி­ருக்­கா­மல் வேறு வழி­க­ளி­லும் செய்­ய­லாம் என்­றார் அவர். நேரில் சென்­றும் அல்­லது தொலை­பேசி வாயி­லா­க­வும் இத்­த­கைய பரி­வர்த்­த­னை­

க­ளைச் செய்­ய­லாம் என்­றார் டாக்­டர் ஜனில்.

அடுத்த ஆண்­டுக்­குள் தகுதி பெறும் தேசிய மின்­னி­லக்­கச் சேவை­களில் 70 விழுக்­காடு சேவை­களை கிள­வுட் தளத்­துக்கு மாற்ற அர­சாங்­கம் இலக்கு கொண்­டுள்­ளது. அதன் ஒரு பகு­தி­யாக 'வர்த்­தக கிள­வுட் ஹோஸ்­டிங்' தளம் செயல்­ப­டு­கிறது.

அர­சாங்க மின்­னி­லக்­கச் சேவை­களில் குறைந்­தது பாதி அளவு அர­சாங்க வர்த்­தக கிள­வுட் சேவைத் தளத்­தில் இருப்­ப­தாக அர­சாங்­கத் தொழில்­நுட்ப அமைப்பு கடந்த ஜூன் மாதம் தெரி­வித்­தது.

இதன் விளை­வாக வர்த்­தக ரீதி­யாக எளி­தில் கிடைக்­கும் கிள­வுட் தீர்­வு­களை அர­சாங்க அமைப்­பு­கள் பயன்­ப­டுத்தி மின்­னி­லக்­கச் சேவை­களை வழங்­க­லாம். இவ்­வாறு செய்­வ­தன் மூலம் அர­சாங்­கத்­தின் மின்­னி­லக்க உள்­கட்­ட­மைப்பு துடிப்­பு­ட­னும் மீள்­தி­ற­னு­ட­னும் உள்­ளது. ஒவ்­வொரு கட்­ட­மைப்­பை­யும் கிள­வுட் தளத்­தில் போடு­வ­தைத் தவிர்த்து செல­வி­னத்தை 40 விழுக்­காடு வரை அர­சாங்­கம் குறைத்­தி­ருப்­ப­தாக 'கவ்டெக்' அமைப்பு தெரி­வித்­தி­ருந்­தது.

எத்­தனை உள்­ளூர் பொதுச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் மின்னிலக்­கச் சேவைத் தடை­களை எதிர்­கொண்­டன என்­றும் டாக்­டர் ஜனி­லி­டம் கேட்­கப்­பட்­டது.

பாது­காப்­பு­மிக்க சுகா­தா­ரப்

பரா­ம­ரிப்புச் செய­லி­கள் அறி­மு­கப்­

ப­டுத்­தப்­ப­டு­வதை உறுதி செய்ய எத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­பது குறித்­தும் அவ­ரி­டம் வினா எழுப்­பப்­பட்­டது.

தனது கட்­ட­மைப்­பு­களை வலுப்

­ப­டுத்தி சேவைத் தடை­க­ளைக் குறைக்க, அர­சாங்­கம் தொடர்ந்து மறு­ஆய்வு செய்­யும் என்று சுகாதார மூத்த துணை அமைச்­ச­ரு­மான டாக்­டர் ஜனில் வலி­யு­றுத்­தி­னார்.