சுற்றுலாப் பேருந்து விபத்தில் 16 சிங்கப்பூரர்கள் காயம்

சுற்றுலாப் பேருந்து விபத்தில் 16 சிங்கப்பூரர்கள் காயம்

1 mins read
fce400f5-2ba7-4a41-9af7-869b437500d8
விபத்தில் பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. படம்: ஊடகம் -

மலே­சி­யா­வில் நிகழ்ந்த சாலை விபத்­தில் 16 சிங்­கப்­பூர் பய­ணி­கள் காய­ம­டைந்­த­னர். இவ்­வி­பத்து திங்­கட்கி­ழமை அதி­காலை மலாக்கா மாநி­லத்­தின் வடக்கு-தெற்கு விரை­வுச்­சா­லை­யில் நிகழ்ந்­த­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

சுற்­று­லாப் பேருந்து ஒன்று 27 பய­ணி­க­ளோடு கோலா­லம்­பூர் நோக்­கிச் சென்­று­கொண்டு இருந்­த­போது மலாக்­கா­வின் ஜெசின் நக­ரில் லாரி ஒன்­றின் பின்­ப­கு­தி­யில் மோதி­யது. மறு­சு­ழற்­சிப் பொருள்­க­ளு­டன் அந்த லாரி சென்­று­கொண்டு இருந்­த­தாக ஜெசின் நகர தீய­ணைப்பு, மீட்பு நிலைய அதி­கா­ரி­யான அஸ்­மான் தேவா­னான் கூறி­னார். இந்த மோத­லின் விளை­வாக, பேருந்­தில் பய­ணம் செய்த 16 பேர் காய­முற்­ற­னர். அவர்­கள் அனை­வ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள். இலே­சான காயங்­க­ளுக்­காக அவர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தாக திரு அஸ்­வான் தெரி­வித்­தார்.

விரை­வுச் பேருந்­தின் ஓட்­டு­நர் கட்­டுப்­பாட்டை இழந்­த­தா­ல் விபத்து நிகழ்ந்­தி­ருக்­கக்­கூ­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.