23 பேருக்கு நகராட்சி மன்ற விருது
ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையைச் சுத்தம் செய்ய இயக்கம் ஒன்றை வழிநடத்திய நடவடிக்கை நேற்று நகராட்சி மன்ற சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2020 ஜூன் மாதவாக்கில் கொவிட்-19 நிலவரம் தீவிர மடைந்தபோது ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் குப்பைகள் மலை போலக் குவிந்தன. அதனைக் கவனித்த கடல்துறை ஆர்வல ரான சமந்தா தியன், 26, சிங்கப்பூரர்களை ஒன்றுதிரட்ட பொது நல இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். பூங்காவிலும் கடற் கரையிலும் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணியில் 2,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் ஈடுபபட்டு 20,000 கிலோவுக்கும் மேற்பட்ட குப்பைகளை அகற்றினர். சமூக உறுப்பினர்களை அங்கீகரிக்க வழங்கப்படும் நகராட்சி மன்ற சேவை விருது
23 பேருக்கு வழங்கப்பட்டது. அவர்களில் தேனுகா விஜயகுமா ரும் (படம்) ஒருவர். சமூக அளவில் பூனைகளைப் பராமரிப் பதற்கான விலங்குநலச் சங்கம் ஒன்றை நிறுவி, வழிநடத்து கிறார் இவர்.
லஞ்சம்: மூவருக்கு அபராதம்
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் மூத்த பொறியாளர்கள் இருவருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேற்று மூவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போ பெங் சை, 59, என்பவருக்கு $15,800, லிம் டோங் கியோங், 58, என்பவருக்கு $13,800, வாங் ஹைரு, 51, என்பவருக்கு $14,200 அபராதம் விதிக்கப்பட்டது.

