பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சேவைகளையும் நீடித்து நிலைக்கக்கூடிய பொருள்கள் உற்பத்தியையும் வழங்கக்கூடிய வர்த்தகங்களுக்கு சிறப்பான முறையில் ஆதரவு வழங்கும் புதிய தளத்தை ஏற்படுத்த பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகள் கைகோத்துள்ளன.
பசுமைப் பொருளியல் ஒழுங்கு முறை நடவடிக்கை என்னும் அந்தத் தளத்தை வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது உரையாற்றிய அவர், பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகள் தற்போது மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் குறுகிய காலத்தில் பசுமைப் பொருளியலுக்கான புதிய தனித்துவத்தை உருவாக்கவும் ஒரே கூரையின்கீழான இந்தத் தளம் உதவும் என்றார்.
வர்த்தகக் கூட்டமைப்பு விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர், "வர்த்தக நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான உதவிகளை உரிய அமைப்புகளிடம் இருந்து விரைந்து பெற இந்தத் தளம் உதவும்," என்றார்.
அத்துடன், வேகமான முறையில் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ளவும் அந்த அமைப்புகள் கைகொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த தளத்தை ஏற்
படுத்தும் நடவடிக்கை பசுமைப் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்
களுக்கு ஒழுங்குமுறைக் கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் வலுவான ஆதரவை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சி என்று வர்த்தக தொழில் அமைச்சு நேற்று தெரிவித்தது.
ஒரே கூரையின்கீழ் பல தீர்வுகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள தளத்தின் வாயிலாக நிறுவனங்கள் புத்தாக்க யோசனைகளைச் சமர்ப்பிக்கலாம்.
சிறந்த யோசனைகள் மிக விரைவாக மதிப்பீடு செய்யப்படுவதால் சிங்கப்பூரில் புதிய பசுமைத் தீர்வுகளை விரைவாக நடை
முறைப்படுத்தும் சாத்தியம் உருவாகும்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கம், குறைந்த கரிமப் பயன்பாட்டிற்கான எதிர்கால உருமாற்றம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை அதி
கரிப்பதைத் தொடர்ந்து இந்த முயற்சிகள் வடிவம் பெற்றுள்ளதாக திரு கான் தமது உரையில் குறிப்பிட்டார்.

