மாறுபட்ட கோணத்தில் கற்றல் திறன்களை வகுக்க கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்து

மாறுபட்ட கோணத்தில் கற்றல் திறன்களை வகுக்க கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்து

2 mins read
38861e01-1365-462d-a995-6dc053b0527d
-

மாறி­வ­ரும் வேலைச்­சூ­ழ­லுக்கு ஏற்­ற­வா­றும் மாண­வர்­க­ளின் படிப்­பில் அதிக நீக்­குப்­போக்கை ஏற்­

ப­டுத்­த­வும் மற்­றொரு பல்­லைக்­க­ழ­கம் தனது பாடத்­திட்­டங்­களை சீர­மைத்து உள்­ளது.

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்கழ­கம் (எஸ்­யு­எஸ்­எஸ்) தான் செய்­துள்ள மாற்­றங்­கள் குறித்து நேற்று அறி­வித்­தது.

அடுத்த ஆண்டு ஜூலை முதல் முழு­நேர பட்­ட­தா­ரி­க­ளா­கச் சேர்­வோ­ருக்­கான 12 பொதுப் பாடத்­திட்­டங்­கள் புதி­தாக அறி­மு­கப்­

ப­டுத்­தப்­ப­டும்.

கடந்த ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட மறு­ஆய்­வின் விளை­வாக இந்த மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­தாக பல்­க­லைக்­க­ழ­கம் தெரி­வித்துள்­ளது.

சட்­டப் படிப்­புத் தவிர அறி­வி­யல், வர்த்­த­கம், மனி­த­வள மேம்­பாடு, அறி­வி­யல் தொழில்­நுட்­பம் போன்­ற­வற்­றில் சேரும் எல்லா மாண­வர்­க­ளுக்­கும் புதிய பாடத் திட்­டம் பொருந்­தும்.

இடை­நிலை நடை­முறை, கற்­றல் திறன்­கள், மின்­னி­லக்­கம் மற்­றும் தர­வுக் கல்வி, படைப்­பாற்­றல் மற்­றும் சுகா­தா­ரம் போன்­ற­வற்­றுக்­கான பாடத்­திட்­டங்­கள் அவை.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கம், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் போன்­றவை அண்­மைய ஆண்­டு­களில் அறி­மு­கம் செய்த பொதுப் பாடத்­திட்­டங்­களை ஒத்து அவை இருக்­கும்.

வாழ்க்­கைத்­தொ­ழி­லுக்­கு­ரிய பல­வ­கைத் தெரி­வு­கள் பல்­க­லைக்

­க­ழக மாண­வர்­கள் பெற புதிய பாடத்­திட்­டம் உத­வும் என்று சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­

க­லைக்­க­ழக தலை­மைப் பேரா­சி­ரி­யர் ராபீ கோ தெரி­வித்து உள்­ளார்.

புதுப்­பிக்­கப்­பட்ட பாடத்­திட்­டங்­களை கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தொடங்கி வைத்­தார். ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நடத்­தப்­பட்ட கற்­றல், கற்­பித்­தல் கருத்­த­ரங்­கில் இந்­நி­கழ்வு நடை­பெற்­றது.

கல்வி நிறு­வ­னங்­கள் கற்­பித்­தல், கற்­றல் தொடர்­பில் புதிய வழி­மு­றைகளைக் கண்­ட­றி­யு­மாறு அமைச்­சர் சான் வலி­யு­றுத்­தி­னார்.

வாழ்க்­கைக்­கான கற்­ற­லில் மாண­வர்­க­ளுக்கு உதவ, படிப்­பிற்­கும் அப்­பால் சென்று, உண்­மை­யான கற்­றல் திறன்­களை வழங்க அந்­நி­று­வ­னங்­கள் முற்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர்­கள் சுய­மா­கக் கற்க உதவ வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.