புதிய வடிவில் நைட் சஃபாரியின் 'கிரீச்சர்ஸ் ஆஃப் தி நைட்'

புதிய வடிவில் நைட் சஃபாரியின் 'கிரீச்சர்ஸ் ஆஃப் தி நைட்'

1 mins read
37b8b5c7-c3f1-456f-a62d-36db0e950dd3
புதுப்பிக்கப்பட்ட நைட் சஃபாரியின் 'கிரீட்சர்ஸ் ஆஃப் தி நைட்' நிகழ்வில் மலாய் ஃபிஷ் ஆந்தை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

மண்டாய் வனவிலங்கு பூங்கா நைட் சஃபாரியின் 'கீரீட்சர்ஸ் ஆஃப் தி நைட்' விலங்குக் காட்சி புதிய வட்டரங்கில் நேற்று மீண்டும் தொடங்கியது. ஓராண்டு காலமாக உருமாற்றம் கண்டு வந்த அதன் புதிய வட்டரங்கு, 30 விழுக்காடு விரிவாக்கம் செய்யப்பட்டு 1,000 பேர் அமரக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தட்பவெப்ப நிலையையும் தாங்கக் கூடியதாகவும் இந்த உட்புற அரங்கு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ரக்கூன், கடல் கீரிகள், ஆந்தைகள், பருந்துகள் என முன்பு வழக்கமாக காட்சிபடுத்தப்பட்ட பல மிருகங்களுடன், மூன்று புது மிருகங்கள் இப்படைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. இண்டியன் கிரெஸ்டெட் முள்ளம்பன்றி, பியர்டெட் பன்றிகள், ரக்கூன் நாய் ஆகிய புது விலங்குகளையும் இனி மக்கள் நிகழ்வில் கண்டு களிக்கலாம்.

விலங்குகளின் இயல்பான நடத்தைகள், சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை காட்டுவதுடன், இப்படைப்பு மிருக நலனை பேணுவதையும் வலியுறுத்துகிறது. கடல் கீரிகள் எவ்வாறு நீர்நிலைகளில் உள்ள நெகிழி முதலிய குப்பைகளால் பாதிக்கப்படுகின்றன போன்ற கருத்துக்களை இப்படைப்பு முன்வைக்கிறது.

புதிய எல்.ஈ.டி திரையுடன், மேம்படுத்தப்பட்ட ஒலி, ஒளி வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்த அரங்கில், விலங்குக் காட்சி ஒவ்வொரு நாளும் இரவு 7.30 மணிக்கும் 9 மணிக்கும் இடம்பெறுகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் இரண்டு மணி நேரம் முன்னதாக இணையத்தில் முன்பதிவு தொடங்கும்.

பதிவு செய்ய: https://www.mandai.com/en/book-presentation-seats.html#ns