மானபங்கக் குற்றம்: ஆகாயப் படை அதிகாரிக்கு பிணை

மானபங்கக் குற்றம்: ஆகாயப் படை அதிகாரிக்கு பிணை

2 mins read
e53d644f-309b-4a00-a259-0d3d20e590b2
பிணையில் வெளியே விடப்பட்ட நியோ அய்க் சியாவ், 45. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக (என்­டியு) மாண­வர்­கள் தங்­கும் அறை­யில் அத்­து­மீறி நுழைந்து அங்­கி­ருந்த பெண் ஒரு­வரை மான­பங்­கம் செய்­த­தாக சிங்­கப்­பூர்க் குடி­ய­ரசு ஆகா­யப் படையின் லெஃப்டி­னென்ட் கர்­னல் ஒரு­வர் $15,000 பிணை­யில் செல்ல நீதி­மன்­றம் நேற்று அனு­மதி வழங்­கி­யது.

மன­ந­லக் கழ­கத்­தில் அவரை விசா­ர­ணைக் கைதி­யாக வைக்க உத்தர விடப்பட்டதைத் தொடர்ந்து பிணை வழங்கப்பட்டது.

நியோ அய்க் சியாவ், 45, எனப்­படும் அவ­ரது தற்­போ­தைய மன­நிலை குறித்து நீதி­மன்­றத்­தில் எது­வும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

அதே­நே­ரம் உள­வி­யல் நிபு­ண­ரு­ட­னான அடுத்­த­கட்ட மன­ந­லப் பரி­சோ­த­னைக்கு அவரை மன­ந­லக் கழ­கம் பரிந்­து­ரைத்துள்­ளது. இந்த வழக்­கின் விசா­ர­ணைக்கு முந்­திய கலந்துரையாடல் 2023 ஜன­வரி 6ஆம் தேதி நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

ஆகா­யப் படை­யின் சினூக் உட்­பட பல ஹெலி­காப்­டர்­களை இயக்­கி­ய­வர் நியோ. இம்மாதம் 13ஆம் தேதி அதி­காலை 2 மணி­ய­ள­வில் 18 வயது, 21 வயது உடைய இரு பெண்­க­ளின் தங்­கும் அறைக்­குள் அத்­து­மீறி நுழைந்­த­தாக இவர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது. இவர் எவ்­வாறு அதனுள் நுழைந்­தார் என்­பது பற்றி தக­வல் தெரி­விக்­கப்­ப­ட வில்லை.

21 வய­துப் பெண்­ணின் இடது தொடை­யைத் தொட்டு மான­பங்­கம் செய்­த­தா­க­வும் அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. பெண்­ணின் பாது­காப்­புக் கருதி அவ­ரைப் பற்­றிய விவ­ரங்­களும் தங்­கும் அறை தொடர்­பான தக­வல்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

முன்­ன­தாக, நியோ சிங்­கப்­பூர் ஆகாயப் படை­யின் எல்­லா­வி­தப் பொறுப்­பு­களில் இருந்­தும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் தற்­காப்பு அமைச்சு அறிக்கை மூலம் தெரி­வித்­தி­ருந்­தது.

தங்­க­ளது மாண­வர்­க­ளின் பாது­காப்பே முக்­கி­யம் என்­றும் அத்­து­மீறி நுழை­வது கடு­மை­யா­கக் கரு­தப்­படும் என்­றும் என்­டியு குறிப்­பிட்­டுள்­ள­ளது. மான­பங்­கக் குற்­றத்­துக்கு ஈராண்டு வரை­யி­லான சிறை, அப­ரா­தம், பிரம்­படி ஆகிய தண்­ட­னை­கள் தனித்தோ சேர்த்தோ விதிக்­கப்­ப­ட­லாம்.