ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனம் ஓட்டிய ஒன்பது பேர்மீது குற்றச்சாட்டு

ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனம் ஓட்டிய ஒன்பது பேர்மீது குற்றச்சாட்டு

1 mins read
72e03186-4570-486d-b72c-f2b991c008a1
குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது ஆடவர்கள் (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -
Google News Preferred Icon

மத்திய விரைவுச்சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக ஒன்பது ஆடவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 25 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக வாகனம் ஓட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்துக்கு 137 கிலோமீட்டர் வேகத்துக்கும் 155 கிலோமீட்டர் வேகத்துக்கும் இடையில் அவர்கள் வாகனம் ஓட்டியதாகக் கூறப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் இதுபோன்ற குற்றங்களை முன்பு புரிந்ததாகக் கூறப்பட்டது. இம்முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு $5,000 வரை அபராதமும் ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.