சாலை விபத்தில் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
b4266ec8-3e96-4d1c-9e63-ada064e5ccb7
படம்: SG ROAD VIGILANTE/பேஸ்புக் -

ஆடம் ரோட்டில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 43 வயது சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலை அருகே உள்ள ஆடம் ரோட்டில் வாகனத்துக்கும் சைக்கிளுக்கும் இடையே ஏற்பட்ட விபத்து குறித்து காலை 6.29 மணிக்கு அழைப்பு கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மயக்கநிலையில் இருந்த சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர்கள் இருவரை காவல்துறை விசாரித்துவருகிறது. அவர்களில் ஒருவர் வாகனத்தின் உரிமையாளர் என அறியப்படுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட 560 கடுமையான விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் இவ்வாண்டு தொடக்கத்தில் தெரிவித்தார்.