முதியோர் மின்னிலக்கமய செயல்திட்டத்தில் 210,000 பேர்

முதி­யோர் மின்­னி­லக்க நடை­முறை­கள் பற்றி தெரிந்துகொள்ள உத­வும் ஒரு செயல்­திட்­டத்­தில் 2020 ஆம் ஆண்டு முதல் 210,000 பேருக்­கும் மேற்­பட்டோர் கலந்­து­கொண்டுள்ளனர்.

தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ நாடாளு­மன்­றத்­தில் இத­னைத் தெரி­வித்­தார்.

மவுண்ட்­பேட்­டன் தொகுதி உறுப்­பி­னர் லிம் பியாவ் சுவா னுக்குப் பதில் அளித்து பேசிய அமைச்­சர், மின்­னி­லக்கக் கருவி­களைப் பயன்­ப­டுத்­து­வது எல்­லாருக்­குமே வச­தி­யானதாக இருக்­காது என்­பது அர­சுக்கு முற்­றி­லும் தெரி­யும் என்­றார்.

முதி­யோர் மின்­னி­லக்­க­மய செயல்­திட்­டத்­தின்­படி, குடி­யி­ருப்­பா­ளர்­கள், குறிப்­பிட்ட நூல­கங்­களில், சமூக நிலை­யங்­களில் செயல்­படும் எஸ்ஜி மின்­னி­லக்க சமூக மையத்­திற்­குச் சென்று நேருக்கு நேர் அல்­லது சிறிய குழுக்­க­ளா­கச் சேர்ந்து மின்­னிலக்கத் தேர்ச்­சி­க­ளைக் கற்­கலாம் என்று அவர் கூறி­னார்.

இணை­யத்­தில் பாது­காப்­பாக நடந்து கொள்­வது, நவீன கைப்­பே­சி­யைப் பயன்­ப­டுத்­து­வது, இத்­தகைய சாத­னங்­கள் மூலம் பணம் செலுத்­து­வது போன்­றவை பற்றி அவர்­கள் கற்­றுக்­கொள்­ள­லாம்.

பல அமைப்­பு­கள் நேருக்கு நேர் சேவை­களை வழங்­கு­கின்றன. அர­சாங்­கச் சேவை, ஐந்து எஸ்ஜி சேவை நிலை­யங்­களை அமைத்து இருக்­கிறது.

அவற்­றில் அதி­கா­ரி­கள் இருப்­பார்­கள். அவர்­கள் மின்­னி­லக்­கப் பணப் பரி­வர்த்­தனை பற்றி குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உத­வு­வர்.

அதி­க­மாக பயன்­ப­டுத்­தக்­கூடிய அர­சாங்­கச் சேவை­களைக் குடி­யிருப்­பா­ளர்­கள் பெற்று அவற்­றின் வழி தங்­கள் பணி­களை மக்கள் முடிக்­கவும் அவர்­கள் உத­வு­வர் என்று அமைச்­சர் மேலும் கூறினார்.

அவ்­வ­ள­வாக மின்­னி­லக்க நாட்­டம் இல்­லாத குடி­யி­ருப்­பாளர்­களைப் பொறுத்­த­வரை, அவர்­களு­டன் அர­சாங்­கம் தொடர்­பு­கொள்ள இணை­யம் சாராத இதர வழி­க­ளி­லும் தொடர்ந்து முக்­கி­ய­மா­ன­வை­யாக இருக்­கின்­றன என்றார் திரு­வாட்டி டியோ.

அதே­வே­ளை­யில், மின்­னி­லக்க தக­வல் தொடர்பு வழி­க­ளின் பயனீடு அதி­க­ரித்து இருப்­ப­தை­யும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!