பறவைப் பூங்கா இடம் 2025ல் கழகத்திடம் ஒப்படைக்கப்படும்

ஜூரோங் பறவை பூங்­கா­வில் இருந்து 3,000க்கும் மேற்­பட்ட பறவை­களும் ஏறத்­தாழ 50 தாவர சிற்­றி­னங்­களும் மண்­டாய் பறவை பூங்காவிற்கு இடம்மாறும்.

வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இத­னைத் தெரி­வித்­தார்.

ஜூரோங் தொகு­தி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஷான் ஹுவாங்­கிற்குப் பதி­ல­ளித்­துப் பேசிய அவர், 2023 ஜன­வரி 3ஆம் தேதி ஜூரோங் பறவை பூங்கா மூடப்­ப­டு­வ­தற்­குப்பின் அங்­கி­ருக்­கக்­கூ­டிய உயி­ரி­னங்­கள் தொடர்­பான திட்­டங்­கள் பற்றி கருத்­து­ரைத்­தார்.

ஜூரோங் பறவை பூங்கா மூடப்­ப­டு­வதை அடுத்து அந்­தப் பூங்­கா­வின் உயி­ரி­னங்­க­ளுக்­கான திட்­டங்­கள் என்ன என்­பது பற்றி அந்த உறுப்­பி­னர் கேட்­டி­ருந்­தார்.

புதிய பூங்கா 17 ஹெக்­டர் பரப்­ப­ள­வில் அமைந்து இருக்­கும்.

அது அடுத்த ஆண்­டின் இரண்­டா­வது காலாண்­டில் திறக்­கப்­படும். மண்­டாய் காட்டு உயி­ரி­னக் காப்­ப­கத்­தில் அமைந்து இருக்­கும் காட்டு உயி­ரின பூங்­காக்­க­ளின் பகு­தி­யாக அது இருக்­கும்.

அதில் 400க்கும் மேற்­பட்ட சிற்­றி­னங்­க­ளைச் சேர்ந்த 3,500 பற­வை­களை நடந்து சென்று பார்வை­யா­ளர்­கள் ரசிக்­க­லாம்.

ஜூரோங் பறவை பூங்­கா­வின் இப்­போ­தைய இடம் 2025ல் ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கத்­தி­டம் திருப்பி ஒப்­ப­டைக்­கப்­படும் என்றும் திரு டான் தெரி­வித்­தார்.

இந்­தக் கழ­க­மும் நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­ய­மும் கூட்­டாக அந்த 20 ஹெக்­டர் பரப்­ப­ள­வுள்ள பறவைப் பூங்காவின் நீண்­ட­கால பய­னீட்டுத் திட்­டங்­கள் பற்றி மறு­ப­ரி­சீ­லனை செய்து வரு­வ­தாக அவர் கூறி­னார். இதில் தேசிய பூங்­காக் கழ­க­மும் இதர அமைப்­பு­களும் ஈடு­பட்டு இருக்­கின்­றன.

இதில் பறவை பூங்­கா­வின் நீர்­வீழ்ச்சி, பக்­கத்­தில் இருக்­கும் ஜூரோங் ஹில் கோபு­ரம் போன்ற இப்­போ­தைய அம்­சங்­களைப் பரி­சீ­ல­னை­யில் எடுத்­துக்­கொள்­வோம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஜூரோங் ஹில், பற­வைப் பூங்கா இடம் ஆகி­ய­வற்­றுக்­கான எதிர்­கால திட்­டங்­க­ளுக்கு உருக்­கொ­டுக்­கும் முயற்­சி­யின் பகு­தி­யாக உரிய நேரத்­தில் பொது­மக்கள் கருத்­து­கள் நாடப்­படும் என்­றும் அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!