வீவக வீடுகளின் சொத்துவரி

வீவக வீடுகளின் சொத்துவரி

1 mins read
bb8f6f18-01c9-4fe3-8c00-fecd2a33426d
-

உரி­மை­யா­ளர்­கள் குடி இருக்­கும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்கு மாடி வீடு­கள், மற்­ற­வர்­கள் குடி­இருக்­கும் வீவக வீடு­கள் 2000ஆம் ஆண்டு முதல் செலுத்­திய சொத்து வரி விகி­தாச்­சா­ரம் பற்றி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் முன் வாய் கேள்வி எழுப்­பி­னார்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் அதற்கு எழுத்து மூல­மாக பதில் அளித்­தார்.

அத்­த­கைய நீண்ட நெடுங்­காலத்­திற்­கான- அதாவது 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கான புள்ளி­வி­வ­ரங்­களை வழங்க இய­ல­வில்லை என்று திரு வோங் கூறினார்.

நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங், 2018 முதல் 2022 வரை ஒவ்­வோர் ஆண்­டும் வசூ­லான மொத்த சொத்து வரி­யில் அத்­தகை­யோர் சரா­ச­ரி­யாக முறையே 1.3% மற்­றும் 1.4% செலுத்­தியதாக உறுப்பினருக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டார்.