சிங்கப்பூர் பருவநிலை இலக்குகள் மிகமிக குறைவு என தகவல்

சிங்கப்பூர் பருவநிலை இலக்குகள் மிகமிக குறைவு என தகவல்

1 mins read
8d3a1443-34fa-4f69-87a8-bb0f6b695fc3
-

சிங்­கப்­பூர் கரி­மக் கழி­வுக்கு அதிக வரியை விதிக்க முயற்­சி­களை முடுக்­கி­விட்டு இருக்­கிறது. கரிம வாயுக் கழிவைக் குறைக்க அது இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

இருந்­தா­லும்­கூட, சிங்­கப்­பூ­ரின் பரு­வ­நிலை இலக்­கு­கள் மிகமிகக் குறை­வாக இருக்­கிறது என்று உலக பரு­வ­நிலை ஆய்வு கூட்­ட­மைப்பு ஒன்று தெரி­வித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூர், 2050வது ஆண்டு வாக்­கில் அறவே கரி­மக் கழிவு இல்­லாத நிலையை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்­ண­யித்து, இதற்­கான திட்­டங்­களை இந்த ஆண்டு அறி­வித்­தது.

2030வது ஆண்டுவாக்­கில் கரிம வாயுக் கழிவை 60 மில்­லியன் டன்னாகக் குறைக்க வேண்­டும் என்பது சிங்­கப்­பூ­ரின் இலக்­காக இருக்­கிறது.

சிங்­கப்­பூர் 2030வது ஆண்டு வாக்­கில் கரிம கழி­வுக்­கான வரியை டன் ஒன்­றுக்கு $50 முதல் $80 வரை உயர்த்­து­கிறது. இப்­போது இந்த வரி $5ஆக இருக்­கிறது.

இருந்­தா­லும்­கூட சிங்­கப்­பூ­ரின் பரு­வ­நிலை இலக்­கு­கள் போதிய அள­வுக்கு இல்லை என்று பரு­வ­நிலை செயல் கண்­கா­ணிப்பு என்ற கூட்­ட­மைப்பு தெரி­வித்துள்ளது.

இந்த அமைப்பு, சிங்­கப்­பூர் புதிய இலக்­கு­களை அறி­வித்­த­தற்கு முன்­ன­தாக சென்ற ஆண்டு செப்­டம்­ப­ரில்கூட இது­போ­லவேதான் தெரி­வித்து இருந்­தது.