படுவேகம்: ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 9 பேர் மீது குற்றச்சாட்டு

படுவேகம்: ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 9 பேர் மீது குற்றச்சாட்டு

2 mins read
3d1b08de-8c0d-4af2-a70f-f0dd5350d84d
-

மத்­திய விரை­வுச்­சா­லை­யில் மித­மிஞ்­சிய வேகத்­தில் வாக­ன­மோட்­டிய குற்­றத்­திற்­காக ஒன்­பது ஆட­வர்­கள் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டது. அவர்­கள் 25 வய­துக்­கும் 38 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

பொது­மக்­க­ளின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­ப­டுத்­தும் வகை­யில் வாக­னம் ஓட்­டி­ய­தாக குற்­றச்­சாட்­டு­களில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சிடிஇ எனப்­படும் மத்­திய விரை­வுச்­சா­லை­யில் மணிக்கு 90 கிலோ­மீட்­டர் என்­னும் வேக­வ­ரம்பு உள்­ளது. ஆனால் இவர்­கள் மணிக்கு 137 கிலோ­மீட்­ட­ருக்­கும் 155 கிலோ­மீட்­ட­ருக்­கும் இடைப்­பட்ட வேகத்­தில் வாக­னங்­க­ளைச் செலுத்தி உள்­ள­தா­கத் தெரி­கிறது.

சீன் சூன் ஸி ஹாங், 38, கென்­னத் ஃபூ யோங்லி, 32, லுயிஸ் லீ ரென் ஜுன், 26, ஓ ஜியா ஃபூ, 27, லின்­கோன் பே வெ ணு குயாங், 26, லிம் யு ஷன், 28, பிரை­யன் அந்­தோனி யாப், 25, இயான் கூ யே சியாங், 27, மற்­றும் டேரில் ஆங் குயி ஹாவ், 27 ஆகி­யோர் குற்­றச்­சாட்­டுக்கு ஆளா­ன­வர்­கள். சூங், ஃபூ மற்­றும் லீ இதற்கு முன்­ன­ரும் இதே­போன்ற குற்­றங்­க­ளைப் புரிந்­த­தால் மீண்­டும் குற்­றம் செய்­தோ­ருக்­கான கூடு­தல் தண்­டனை இவர்­க­ளுக்கு விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

இவ்­வாண்டு பிப்­ர­வரி 27ஆம் தேதி அதி­காலை 2 மணி­ய­ள­வில் மத்­திய விரை­வுச்­சா­லை­யில் அதி­வே­கத்­தில் பல வாக­னங்­கள் கண்­மூ­டித்­த­ன­மாக சென்­றது குறித்­தும் வாக­னங்­கள் ஒன்­றை­யொன்று முந்­திச் செல்ல படு­வே­கத்­தில் சென்­றது குறித்­தும் காவல்­து­றைக்­குத் தக­வல் சென்­றது.

காவல்­துறை கேமரா மற்­றும் கண்­கா­ணிப்­புப் படச் சாத­னங்­கள் வழி­யாக 16 ஓட்­டு­நர்­கள் மார்ச் 9ஆம் தேதி அடை­யா­ளம் காணப்­பட்டு கைது செய்­யப்­பட்­ட­னர்.

ஆபத்­தான முறை­யில் வாக­னம் ஓட்­டும் குற்­றத்­துக்கு அதி­க­பட்­சம் $5,000 அப­ரா­தம், ஓராண்டு வரை­யி­லான சிறை ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம்.

மறு­ப­டி­யும் குற்­றம் புரி­வோ­ருக்கு இந்­தத் தண்­டனை இரட்­டிப்பு ஆகும்.