1எம்டிபி வழக்கு: தலைமறைவாக இருக்கும் ஜோ லோவின் சகோதரி மீது வழக்கு

1எம்டிபி வழக்கு: தலைமறைவாக இருக்கும் ஜோ லோவின் சகோதரி மீது வழக்கு

1 mins read
996065a2-be8e-497e-9cdb-d433eed4404d
-

மலே­சி­யா­வின் 1எம்­டிபி நிதி­யி­லி­ருந்து US$4.5 பில்­லி­யன் (S$6.17) கையா­ளப்­பட்ட விவ­கா­ரத்­தில் தொடர்­பு­டைய தலை­ம­றை­வாக இருக்­கும் மலே­சிய தொழி­ல­தி­பர் ஜோ லோவின் சகோ­த­ரி­யான லோ மே லின்­னுக்கு எதி­ராக வழக்­குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து திரு­வாட்டி லோ என்­ப­வ­ருக்கு தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ல் பத்­தி­ரி­கை­யில் நேற்று முன்­தி­னம் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

1எம்­டி­பியை பிர­தி­நி­திக்­கும் வழக்­க­றி­ஞர்­கள், திரு­வாட்­டி­ லோ­வின் முக­வ­ரிக்கு வழக்­கின் ஆவ­ணத்தை அனுப்­பு­வ­தற்­கான முயற்­சி­கள் தோல்­வி­ய­டைந்­த­தாக பெர்­னாமா செய்தி தெரி­விக்­கிறது.

திரு­வாட்டி லோ, 46, அவ­ரது தொழி­ல­தி­பர் சகோ­த­ரர், 41, அவர்­க­ளின் தாய் கோ கெய்க் ஈவ், தந்தை லோ ஹொக் பெங், சகோ­த­ரர் லோ டேக் ஸ்சென் ஆகி­யோ­ரு­டன் ஜோ லோவின் வணி­கப் பங்­காளி எனக் கரு­தப்­படும் திரு டான் கிம் லூங்­கும் அதில் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ள­னர்.

1எம்­டிபி மற்­றும் அதன் நான்கு துணை நிறு­வ­னங்­கள் வாதி­க­ளாக உள்­ளன. மலே­சி­யா­வைத் தள­மா­கக்­கொண்ட சட்ட நிறு­வ­ன­மான ஸ்க்­ரைன் அவற்­றைப் பிரதி­நி­திக்கிறது. திரு­வாட்டி லோ, ஜோ லோ ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து 3.5 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் கோரப்­ப­டு­கிறது.

இந்த வழக்கை எதிர்­கொள்­வ­தற்­கான ஆவ­ணத்தை நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்ய திரு­வாட்டி லோவுக்கு 14 நாட்­கள் உள்­ளன. அப்­படி அவர் செய்­யா­வி­டில் அவ­ருக்கு எதி­ரா­கத் தீர்ப்பு வழங்­கப்­படும்.